Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷோபா கரண்ட்லஜே

ஷோபா கரண்ட்லஜே
ஷோபா கரண்ட்லஜே கர்நாடக மாநில பாஜகவின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். ஷோபா மிகவும் இளம் வயதிலேயே ஆர்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ஷோபா கரண்ட்லஜே சுயசரிதை

ஷோபா கரண்ட்லஜே கர்நாடக மாநில பாஜகவின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். ஷோபா மிகவும் இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டவர். 1994ம் ஆண்டில் சகுந்தலா ஷெட்டியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கர்நாடக மாநிலத்தில் எட்டியூரப்பா தலைமையில் அமைந்த முதல் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தில் ஷோபா வெளிச்சத்திற்கு வந்தார். ஷோபா கரண்ட்லஜே பாஜகவினரால் செல்லமாக ஷோபாக்கா என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க

ஷோபா கரண்ட்லஜே தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஷோபா கரண்ட்லஜே
பிறந்த தேதி 23 Oct 1966 (வயது 59)
பிறந்த இடம் புட்டூர், தக்ஷினா கன்னடா,கர்நாடகா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் சமூக சேவகர்
தந்தை பெயர் திரு மோனப்ப கவுடா
தாயார் பெயர் திருமதி. பூவக்கா
துணைவர் பெயர் தகவல் இல்லை
மதம் இந்து

ஷோபா கரண்ட்லஜே நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹5.49 CRORE
சொத்துக்கள்
₹10.49 CRORE
கடன்கள்
₹4.99 CRORE

ஷோபா கரண்ட்லஜே சுவாரசிய தகவல்கள்

ஷோபா கரண்ட்லஜே இந்துத்துவா கொள்கைகளில் உறுதியான பிடிப்பு கொண்டவர். அதேபோல அரசியல் மற்றும் சமூக வாழ்விலும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர். கும்ரதாரா நதியின் குறுக்கே அணை கட்டுவதை தீவிரமாக எதிர்ப்பவர்.

ஷோபா கரண்ட்லஜே அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2015: 13 மே 2015 முதல் நில கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (இரண்டாம் திருத்தம்) சட்டமசோதாவுக்கான இணைக் குழுவின் உறுப்பினராக செயல்பட்டார்.
  • 2014: .உடுப்பி - சிம்கமகளுரு தொகுதியில் ஷோபா போட்டியிட்டார். 16 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 2014 ம் ஆண்டு டிசம்பர் 3 வரை அவர் பெண்களுக்கான அதிகார குழு உறுப்பினராக இருந்தார்.
  • 2013: பாரதிய ஜனதா கட்சியின் சுரேஷ் குமார் ஷோபா கரண்ட்லஜேவை தோற்கடித்தார்.கர்நாடக ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது.
  • 2012: கர்நாடகா ஜனதா கட்சியில் சேர்வதற்காக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ஷோபா கரண்ட்லஜே வெளியேறினார்.
  • 2010: ஷோபா மின்சார துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2009: ஷோபா கரண்ட்லஜே கர்நாடகா அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.
  • 2008: ஷோபா யஷ்வந்த்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2004: ஷோபா சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2000: ஷோபா கரண்ட்லஜே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1999: ஷோபா பி. எஸ் எடியூரப்பாவின் சங்கல்ப ரத யாத்திரையில் பங்கு பெற்றார்.
  • 1997: .ஷோபா உடுப்பி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷோபா கரண்ட்லஜே சாதனைகள்

ஷோபா கரண்ட்லஜே எலினா ஹோல் திட்டப் போராட்டத்தின் மூலம் தேசிய அளவில் அறியப்பட்டார். கல்லூரி காலத்தில் ஷோபா பல சமூக சீர்திருத்தங்களுக்காக போராடினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+