Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தராமையா

சித்தராமையா
2013ம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக இருந்தவர் சித்தராமையா. அடிப்படையில் சித்தராமையா ஒரு வழக்கறிஞர் ஆவார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

சித்தராமையா சுயசரிதை

2013ம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக இருந்தவர் சித்தராமையா. அடிப்படையில் சித்தராமையா ஒரு வழக்கறிஞர் ஆவார். பேராசிரியர் நஞ்சுண்டசாமிதான் இவரை அரசியலுக்கு அழைத்து வந்தவர். சமாஜ்வாடி யுவஜனா சபாவில் சித்தராமையாவின் அரசியல் ஆரம்பித்தது. 1978ம் ஆண்டு வரை ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றினார். கர்நாடக சட்டசபையில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவர்களில் சித்தராமையாவும் ஒருவர். முன்பு மதச்சார்பற்ற ஜனதாதள தலைவராக இருந்துள்ளார். கர்நாடக துணை முதல்வராகவும் 2 முறை இருந்துள்ளார். குருபா சமூகத்தைச் சேர்ந்தவர். தேவெ கெளடாவுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பிறகு 2005-06ல் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்டார் சித்தராமையா. பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தார். தற்போது காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருக்கிறார் சித்தராமையா.

மேலும் படிக்க

சித்தராமையா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சித்தராமையா
பிறந்த தேதி 12 Aug 1948 (வயது 77)
பிறந்த இடம் மைசூர்
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் சித்தராமே கெளடா
தாயார் பெயர் போரம்மா கெளடா
துணைவர் பெயர் பார்வதி சித்தராமையா
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 2 மகன்(கள்)
மதம் Atheist

சித்தராமையா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹28.07 CRORE
சொத்துக்கள்
₹51.94 CRORE
கடன்கள்
₹23.86 CRORE

சித்தராமையா சுவாரசிய தகவல்கள்

சித்தராமையாவின் பெற்றோர் அவரை டாக்டராக்க நினைத்தனர். ஆனால் சித்தராமையா வக்கீலாகி விட்டார். மேலும் அவர் அரசியலுக்கு வந்தது கூட எதிர்பார விபத்துதான். கர்நாடகத்தை பசியில்லாத மாநிலமாக பார்க்க ஆசைப்பட்டார் சித்தராமையா. அதனால்தான் அவர் இந்திரா கேன்டீனை கொண்டு வந்தார். 2018ம் ஆண்டு அவர் தனது 13வது மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்து சாதனை படைத்தார். 2010ம் ஆண்டு பெங்களூரிலிருந்து பெல்லாரிக்கு 320 கிலோமீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார். ரெட்டி சகோதரர்களை எதிர்த்து நடந்த போராட்டம் இது. இது கர்நாடக அரசியலில் முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது. பெல்லாரி சலோ போராட்டம் பாஜகவின் சட்டவிரோத சுரங்கங்களையும், ஊழலையும் எதிர்த்து நடந்த போராட்டமாகும்.

சித்தராமையா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: வருணா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்று எம்எல்ஏ ஆனார் சித்தராமையா. தற்போது காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருக்கிறார் சித்தராமையா.
  • 2013: கர்நாடகத்தின் 22வது முதல்வராக பதவியேற்றார் சித்தராமையா. 2018 வரை முதல்வராக நீடித்தார் சித்தராமையா. 1977ம் ஆண்டுக்குப் பிறகு முதல்வர் பதவியை முழுமையாக நீடித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாதான்.
  • 2008: வருணா சட்டசபைத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006: 2006 டிசம்பரில் நடந்த சாமுண்டேஸ்வரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார். மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் சிவபசப்பாவை வெறும் 257 வாக்குகளில் வீழ்த்தினார் சித்தராமையா.
  • 2005: மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சித்தராமையா.
  • 2004: கர்நாடக துணை முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார்.
  • 1999: சட்டசபைத் தேர்தலில்தோல்வி அடைந்தார் சித்தராமையா
  • 1996: ஜே.எச். படேல் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக சித்தராமையா பதவியேற்றார்.
  • 1994: கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 1992: ஜனதாதள செயலாளராக நியமிக்கப்பட்டார் சித்தராமையா.
  • 1989: 1989 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர மூர்த்தியிடம் தோல்வியைத் தழுவினார் சித்தராமையா.
  • 1985: இடைத் தேர்தலில் போட்டியிட்டு சித்தராமையா, அதே தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கால்நடைத் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றார்.
  • 1983: சாமுண்டேஸ்வரி தொகுதியிலிருந்து கர்நாடக சட்டபசபைக்கு சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய லோக்தள் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.
  • 1978: சித்தராமையாவுக்கு மைசூரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் நஞ்சுண்டசாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்தான் சித்தராமையாவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினார். பிந்னர் மைசூர் தாலுகா தேர்தலில் வெற்றி பெற்றார் சித்தராமையா.

முந்தைய வரலாறு

  • 1968: 1968ம் ஆண்டு மைசூரின் சீனியர் வழக்கறிஞர் சிக்க போரையாவிடம் ஜூனியராக சேர்ந்தார். பின்னர் சட்டக் கல்லூரியில் சட்ட பேராசிரியராகவும் சில காலம் பணியாற்றினார்.

சித்தராமையா சாதனைகள்

தேவராஜ் அர்ஸுக்குப் பிறகு கர்நாடகத்தின் முதல்வராக முழுமையாக 5 வருட காலம் ஆட்சியில் நீடித்தவர் சித்தராமையாதான். ஆட்சியமைத்ததும் ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வழங்கினார். 2018ம் ஆண்டு அவர் 13வது கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஒரு சாதனையாகும்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+