Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரண் கெர்

கிரண் கெர்
கிரண் கெர் ஒரு நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
By Rashmi | Friday, March 29, 2019, 05:33:11 PM [IST]

கிரண் கெர் சுயசரிதை

கிரண் கெர் ஒரு நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக அரசியலில் நுழைந்தார். அவர் ஜாட் சீக்கிய குடும்பத்தில்1955ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நாளில் இல் பிறந்தார் மற்றும் சண்டிகரில் வளர்ந்தார். சண்டிகரில் கல்வி கற்றார், பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் இந்திய நாடகத் துறையிலிருந்து பட்டம் பெற்றார். கவுதம் பெர்ரியை திருமணம் செய்து கொண்டார், அவர் ஒரு தொழிலதிபர் ஆவார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். பின்னர் அவர் விவாகரத்து பெற்றார். 1985 ஆம் ஆண்டில் அனுபம் கெர்ரை திருமணம் செய்து கொண்டார். 1983 ஆம் ஆண்டில் பஞ்சாபி திரைப்படமான அஸ்ரா பியார் டா திரைப்படத்தில் அறிமுகமானார். மே 2014 ல் சண்டிகரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவர் அரசியலில் அறிமுகமானார். கிரண் கெர்ருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர். அவரது அண்ணன் கலைஞர் அமர்தீப் சிங் 2003ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அர்ஜுனா விருது பெற்ற பேட்மின்டன் வீரர் கன்வால் தக்கர் கவுர் ஆவார். அவரது மற்றொரு சகோதரி, சரண்ஜித் கவுர் சந்து இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவரின் மனைவி ஆவார்.

மேலும் படிக்க

கிரண் கெர் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கிரண் கெர்
பிறந்த தேதி 01 Jan 1970 (வயது 56)
பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் திரைப்பட நடிகை , சமூக சேவகர்
தந்தை பெயர் லெப்டினென்ட் கர்னல் கால் தக்கார் சிங்
தாயார் பெயர் தில்ஜித் கௌர்
துணைவர் பெயர் அனுபம் கெர்
துணைவர் தொழில் நடிகர்
குழந்தைகள் 1 மகன்(கள்)
மதம் சீக்கியர்
இணையதளம் https://www.india.gov.in/my-government/indian-parliament/kirron-anupam-kher

கிரண் கெர் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹46.87 CRORE
சொத்துக்கள்
₹47.5 CRORE
கடன்கள்
₹62.79 LAKHS

கிரண் கெர் சுவாரசிய தகவல்கள்

கிரண் கெர் ஒரு பேட்மின்டன் வீராங்கனையும் ஆவார். தேசிய அளவிலான போட்டிகளில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனோவுடன் அவர் இணைந்து ஆடியுள்ளார். புடவை என்றால் கிரணுக்கு ரொம்பப் பிடிக்கும். புடவை மீது தனி மோகம் கொண்டவர். படங்களிலும் கூட அவர் புடை கட்டியே பெரும்பாலும் நடிக்க விரும்புவார். எண் கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதனால் தனது பெயரை கிரண் என்பதிலிருந்து கிரோண் என மாற்றிக் கொண்டவர். இவருக்கு சமோசா மற்றும் அனைத்து பஞ்சாபி உணவுகள் மீதும் தீராக் காதல் உண்டு. 2009 ஆம் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.

கிரண் கெர் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: காங்கிரஸ் கட்சியின் பவன் குமார் பன்சாலை தோற்கடித்து 16வது லோக்சபாவுக்கு கிரண் கெர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 14 August 2014 - 5 July 2016: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆலோசனை குழுவின் உறுப்பினர் ஆவார்.
  • 7 Jan 2015: உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் உறுப்பினர் ஆனார்.
  • 5 July 2016: மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக இருந்தார்.
  • 1 Sept 2014 - 5 July 2016: மனிதவள மேம்பாட்டுத்துறை நிலைக்குழு மற்றும் உறுப்பினர் குழுவின் உறுப்பினர், நீர்வள ஆதார அமைச்சகம், நதி மேலாண்மை மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1 Sept 2014: உள்துறை நிலைக்குழு உறுப்பினர், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.

முந்தைய வரலாறு

  • 2009: இந்தியா காட் டேலண்ட் ஷோவின் நடுவராக செயல்பட்டார்.
  • 2004: லாஸ் ஏஞ்சலஸில் 2004 ஆம் ஆண்டு நடந்த இந்திய திரைப்பட விழாவில் அவர் கெளரவிக்கப்பட்டார்.
  • 2003: சுவிட்சர்லாந்தில் உள்ள லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவிலும் கராச்சி சர்வதேச திரைப்பட விழாவிலும் அர்ஜென்டினாவில் சிய்பியிலும், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திலும் கமோஷ் பாணி படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்றார்.
  • 1999: வங்காள மொழி படமான பெரிவாலிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
  • 1983: பஞ்சாபி திரைப்படமான ஆஸ்ரா பியார் டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

கிரண் கெர் சாதனைகள்

கிரோன் கெர் சமூக நடவடிக்கைகள் மீது ஒரு சிறப்பு ஈடுபாடு கொண்டவர். லாட்லி (பெண் சிசுக்கொலைக்கு எதிரான பிரச்சாரம்) மற்றும் ரோகோ கேன்சர் (புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்) போன்ற இலாப நோக்கற்ற இயக்கங்களுடன் அவர் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தார். அவர் இரண்டு தேசிய திரைப்பட விழா விருதுகள், கராச்சி சர்வதேச திரைப்பட விழா விருது, லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா விருது மற்றும் பலவற்றையும் வென்றுள்ளார். ரித்துபர்னா கோஷின் பெங்காலி திரைப்படமான பரிவாலிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். தேவதாஸ் திரைப்படத்திற்காக ஃபிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். சுவிட்சர்லாந்தில் உள்ள லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், கராச்சி சர்வதேச திரைப்பட விழாவில், அர்ஜென்டினாவில் சிய்பியிலும், தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திலும் கமோஷ் பாணிக்கு சிறந்த நடிகை விருது வென்றார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+