Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி
பாஜகவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி விஜய் ராம்னிக்லால் ருபானி. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் குஜராத் முதல்வராக இருக்கிறார்.
By Moumi Majumdar | Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி சுயசரிதை

பாஜகவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி விஜய் ராம்னிக்லால் ருபானி. 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் குஜராத் முதல்வராக இருக்கிறார். ராஜ்கோட் மேற்கு தொகுதியிலிருந்து குஜராத் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பர்மாவின் ரங்கூன் நகரில் பிறந்தவர் ருபானி. 1960ம் ஆண்டு ராஜ்கோட்டுக்கு அவர் இடம் பெயர்ந்தார். தர்மேந்திரசிங்ஜி கலைக் கல்லூரியில் பிஏ படிப்பையும், செளராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படிப்பையும் முடித்தார். இவரது கல்லூரி படிப்பின் இறுதிக் காலத்தில் ஏபிவிபியில் இணைந்தார். பின்னர் ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன் சங்கிலும் இணைந்து செயல்பட்டார்.

மேலும் படிக்க

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி
பிறந்த தேதி 02 Aug 1956 (வயது 69)
பிறந்த இடம் ரங்கூன், பர்மா
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Graduate Professional
தொழில் அரசியல்வாதி, வர்த்தகம்
தந்தை பெயர் ராம்னிக்லால் ருபானி
தாயார் பெயர் மாயாபென் ருபானி
துணைவர் பெயர் அஞ்சலி ருபானி
துணைவர் தொழில் வர்த்தகம்
குழந்தைகள் 2 மகன்(கள்) 1 மகள்(கள்)
மதம் சமணர்
இணையதளம் www.vijayrupani.in

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹8.26 CRORE
சொத்துக்கள்
₹9.09 CRORE
கடன்கள்
₹83.01 LAKHS

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி சுவாரசிய தகவல்கள்

படிப்பது, சுற்றுலா செல்வது இவருக்குப் பிடிக்கும். அவருக்குப் பிடித்த அரசியல் தலைவர் நரேந்திர மோடி. 1976ம் ஆண்டு அவசரகால நிலையின்போது இவர் பூஜ் மற்றும் பவநகர் சிறைச்சாலைகளில் 11 மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2017: 2017ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குஜராத் முதல்வராக பதவியேற்றார். நிதின் படேல் துணை முதல்வராக பதவியேற்றார்.
  • 2017: குஜராத் சட்டசபைக்கு ராஜ்கோட் மேற்கு தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் பதவியையும் கைப்பற்றினார்.
  • 2016: குஜராத்தின் 16வது முதல்வராக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் பாஜக தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
  • 2015: முதல்வர் அனந்தி பென் படேல் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்து, குடிநீர் விநியோகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2014: 2014ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்று ராஜ்கோட் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனார். வஜுபாய் படேல் சட்டசபையிலிருந்து ராஜினாமா செய்ததால் இந்த இடத்திற்கு இடைத் தேர்தல் வந்தது.
  • 2013: குஜராத் மாநகராட்சி நிதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 2006: ராஜ்யசபா உறுப்பினராக 2006 முதல் 2012 வரை செயல்பட்டார். குஜராத் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக 2006ம் ஆண்டு செயல்பட்டார்.
  • 1998: குஜராத் பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். குஜராத் அரசின் தேர்தல் அறிக்கை அமலாக்க குழுவின் தலைவராக 1998ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை செயல்பட்டார்.
  • 1995: ராஜ்கோட் மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ருபானி.
  • 1987: ராஜ்கோட் நகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கழிப்பறை கமிட்டியின் தலைவராக செயல்பட்டார். ராஜ்கோட் மாநகராட்சியின் நிலைக்குழு உறுப்பினராக 1988ம் ஆண்டு முதல் 1996 வரை செயல்பட்டார்.
  • 1978: 1981ம் ஆண்டு வரை ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காக பணியாற்றினார்.
  • 1976: அவசர நிலைக் காலத்தின்போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 11 மாத சிறைவாசம் அனுபவித்தார்.
  • 1971: ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன் சங்கில் இணைந்து செயல்பட்டார். பாஜக தொடங்கியதிலிருந்தே அதனுடன் இணைந்து செயல்படுபவர்.
  • 1970: ஏபிவிபியில் ஒரு செயற்பாட்டாளராக விஜய் ருபானி இணைந்தார்.

விஜயக்குமார் ராம்னிக்லால் ருபானி சாதனைகள்

குஜராத் அரசியல் தலைவர்களிலேயே நல்ல இமேஜ் வைத்திருப்பவர் இவர். இவர் மீது எந்தப் புகாரும் இதுவரை இல்லை. இவரது ஆட்சிக்காலத்தில் 6000 கிராமங்கள், டிஜிட்டல் ஹைவேயில் இணைக்கப்பட்டன. உஜாலா யோஜனா திட்டம் குஜராத்தில் அமலாக்கப்பட்டபோது, எல்இடி பல்புகளின் விலையை இவர் வெகுவாக குறைத்தார். மேலும் எல்இடி டியூப்லைட் மற்றும் மின்விசிறி விற்பனையையும் அதிகரித்தார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+