விபரீதங்கள் இங்கே விற்கப்படும்.. புதிய வரலாறு படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்
சென்னை: இந்த ஆன்லைன் யுகத்திலும் எழுத்தில் புதிய வரலாறு படைக்க முடியும் என்பதை கிரைம் கதை மன்னர் ஆர்.ராஜேஷ்குமார் நிரூபித்துள்ளார்.
ராஜேஷ் குமார் நாவல்களுக்கும், அவரது கதைகளுக்கும் அடிமையாகதவர் யார்தான் இருக்க முடியும். சாதாரண சிறு கதை முதல் நெடுங்கதை வரை ராஜேஷ் குமார் தொடாத உச்சம் கிடையாது.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய எழுத்தாளர் தொடர்ந்து நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு தொடர்களை எழுதி வருவது நமது வாசகர்கள் செய்த புண்ணியம்தான். ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் சமீபத்தில் முடிவடைந்த தொடர்தான் விபரீதங்கள் இங்கே விற்கப்படும். 70 அத்தியாயங்கள் வரை நீண்ட இந்தத் தொடர் பெரும் விறுவிறுப்புடன் தொடங்கி , வளர்ந்து, முடிந்து வாசகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இந்தத் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் ராஜேஷ் குமார். வழக்கமாக கதைகளுக்கு அவர் அதிக எபிசோடுகளை ஒரு தொடருக்கு எழுதுவதில்லை. ஆனால் நமக்காக எழுதிய விபரீதங்கள் இங்கே விற்கப்படும் தொடருக்கு மட்டும்தான் அதிகபட்ச எபிசோடுகளை எழுதியுள்ளார். அந்த வகையில் நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளமும் பெருமைப்படும் வகையிலான ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தத் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புதான் அவரை இத்தனை எபிசோடுகள் வரை எழுதத் தூண்டியதாக பெருமையுடன் சொல்லும் எழுத்தாளர் ராஜேஷ் குமார், நமது வாசகர்களுக்கு தனது அன்பையும் , நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரை மீண்டும் படிக்க விரும்புவோருக்கும்.. புதிதாக படிக்க வருவோருக்கும் வசதியாக.. அந்தத் தொடர் மொத்தமாக இங்கே.. வாங்க படிங்க.. மகிழுங்க
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70]
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications