For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் போட்டி

By Staff
Google Oneindia Tamil News

வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும்க முதல்வர் ஜெயலலிதா இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் போட்டி
இயக்குனர் விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஜேந்தர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.

2 தொகுதி காங். வேட்பாளர்கள் மாற்றம்
தொட்டியம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

நான் தனி ஆள் இல்லை: கார்த்திக்
என் பின்னால் லட்சோப லட்சம் இளைஞர் சக்தி உள்ளது. நான் தனி ஆள் இல்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

அன்பழகன், வளர்மதி, எஸ்விசேகர் மனு தாக்கல்
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், அமைச்சர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பாரதீய ஜனதாக் கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

என் உதவியுடன் கூட்டணி ஆட்சி -சு.சுவாமி
வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. எனவே ஜனதாக் கட்சியின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமையும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம சுவாமி கொஞ்சம் கூட சிரிக்காமல் கூறியுள்ளார்.

கலர் டிவி: கணக்கெடுப்பு துவக்கம் -கருணாநிதி
கலர் டிவி திட்டம் தொடர்பாக பயன் பெறக் கூடியவர்கள் குறித்த கணக்கெடுப்பை திமுக தொடங்கி விட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிமுகவினர் பாராமுகம்-சிறுத்தைகள் விரக்தி
தங்களது பிரசாரங்களுக்கு உள்ளூர் அதிமுக தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணிப்பதாக வட மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

ஜெ ஆட்சியில் தமிழகம் மகிழ்ச்சி: வைகோ
1980ல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மகுடம் சூட்டி சரித்திரம் படைத்ததைப் போல வருகிற தேர்தலிலும் புதிய சரித்திரம் மீண்டும் அரங்கேறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ஜெவுக்கு தோல்வி: உளவுத்துறை கணிப்பு- நக்கீரன்
கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாக நக்கீரன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுக்க கி.வீரமணி பிரசாரம்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

ஜெ. அலையில் சிக்கிய சீமான்!
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் மத்தியில் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் சீமான் சிக்கிக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரூபா நோட்ட கண்ணில் காட்டியவர் அம்மா-திருமா
தமிழக மக்கள் ஓராயிரம் ரூபாயை ஒரே தாளில் பார்த்தது அம்மாவின் ஆட்சியில்தான். இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பாண்டிச்சேரி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல்14, 2006

கருத்துக் கணிப்பு- அதிமுக 46%, திமுக 44%தமிழகத்தில் அதிமுக, திமுக இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆண்டிப்பட்டியில் நாளை ஜெ வேட்பு மனு தாக்கல்முதல்வர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அனைத்து அதிமுக வேட்பாளர்களும் நாளையே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.

தொங்கு சட்டசபை வரப் போகிறது-விஜயகாந்த்/ஞூணிணணா>கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று கூறும் திமுக அதை முன்பே செய்யாதது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒயிட் காலர் கார்த்திக்: தொண்டர்கள் சுர்நடிகர் கார்த்திக் ஒரு அரசியல்வாதி போல செயல்படாமல், அலுவலக சிஇஓ போல நடந்து கொள்வதால் பார்வர்ட் பிளாக் தொண்டர்கள், அக்கட்சியின் வேட்பாளர்கள் படு கடுப்பாக உள்ளனர்.

கெட்ட ரத்தம் அகல திமுகவுக்கு வாக்கு-கருணாநிதிதமிழகத்தை சூழ்ந்துள்ள கெட்ட ரத்தம் அகல ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சேப்பாக்கத்தில் கருணாநிதி தேறுவாரா?-வைகோ2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்று கூறி வரும் கருணாநிதியின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

முதல் நாளில் 81 வேட்பு மனுக்கள் தாக்கல்:
நெப்போலியன் சொத்து ரூ. 4 கோடி
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 81 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல் களத்தில் குதித்த அரவாணி!வேலூர் சட்டசபைத் தொகுதியில் சல்மா என்ற அரவாணி சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கேப்டன் மீது பசுநேசன் பாய்ச்சல்கட்சி ஆரம்பித்து 6 மாதத்திற்குள் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்த் அலை பாய்வது நியாயமே இல்லை, அது கண்டனத்துக்குரியது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.

மாஜி அதிமுக அமைச்சர்கள் திமுகவுக்கு ஆதரவுஎம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த, தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ள ராஜாராம், ராஜா முகம்மது, வி.வி.சுவாமிநாதன் ஆகியோர் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அறந்தாங்கி அதிமுக வேட்பாளர் மாற்றம்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பெரியசாமி மாற்றப்பட்டு கார்த்திகேயன் என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பிரச்சாரத்துக்கு ரோஜா, மும்தாஜ்!அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடும் அவரது கட்சியின் ஸ்டார் பிரச்சாரினியான நடிகை ரோஜாவும் தமிழகம் வரவுள்ளனர்.

...மேலும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X