• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சுயசரிதை

சினிமா மீது நாட்டம் கொண்ட ஒரு முழுமையான இந்தியராக இருந்தால், இந்திய நடிகரான கமல் ஹாசன் மற்றும் அரசியலில் நுழையும் அவரின் 2017 ஆம் ஆண்டு தீர்மானத்தை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். வெற்றிகரமான நடிகர்களாக இருந்து அரசியல்வாதியாக மாறிய எம்.ஜி.ஆர்( இந்தியாவில் முதல்வராகிய முதல் நடிகர்), என்.டி.ஆர், ஜெயலலிதா ஆகியோரையும், வெற்றிகரமான நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்ற சிலரையும் தமிழ்நாடு பார்த்துள்ளது.எனினும் கமல்ஹாசன் தனது அரசியல் முயற்சியில் இதேபோன்ற வெற்றியை பெற முடியுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த சாதனையை அடைவதற்காக அவர் பிப்ரவரி 2018ல் மக்கள் நீதி மய்யம்(MNM)என்ற சொந்த அரசியல் கட்சியை நிறுவினார். அக்கட்சி வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளது.கமல்ஹாசன் திமுக மற்றும் அதிமுக கூட்டணியை நிராகரித்துவிட்டாலும் , தி.மு.க. உடனான உறவை காங்கிரஸ் துண்டித்துவிட்டால், காங்கிரசுடன் கூட்டணி சேருவோம் என வெளிப்படையாக அறிவித்தார்.


தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல இந்திய திரைப்பட விருதுகளை கமல்ஹாசன் வென்றுள்ளார். சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்கு சமர்ப்பித்த திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்த ஒரே நடிகர் இவர் மட்டுமே. ஒரு கலைஞராக கமல்ஹாசன், இயக்கம் திரைக்கதை, பாடலாசிரியர், நடனக் கலைஞர் என அனைத்திலும் பணியாற்றியுள்ளார். 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் 4 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த படம் ராஷ்டிரபதி விருதை (ஜனாதிபதி தங்க பதக்கம்) வென்றது. அதன்பின்னர் சினிமா உலகில் தவிர்க்கமுடியாத சக்தியானார். விருது பெற்ற பல திரைப்படங்களில் நடித்த கமல்ஹாசன், குறிப்பிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் அரசியல் வளையத்தில் தனது தொப்பியை எறிய முடிவு செய்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கமல்ஹாசன்
பிறந்த தேதி 07 Nov 1954 (வயது 64)
பிறந்த இடம் இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
கட்சி பெயர் Makkal Needhi Maiam
கல்வி NULL
தொழில் திரைப்பட நடிகர்
தந்தை பெயர் டி.சீனிவாசன்
தாயார் பெயர் ராஜலட்சுமி
துணைவர் பெயர் கௌதமி
துணைவர் தொழில் நடிகை
மகள்கள் 2

தொடர்பு

நிரந்தர முகவரி சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தற்காலிக முகவரி சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொடர்பு எண் 7772853906
மின்னஞ்சல் NA
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

1981 ஆம் ஆண்டு வெளியான ராஜபார்வை கமல்ஹாசனின் 100 வது திரைப்படம். இத்திரைப்படம் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் அறிமுகமானார். பார்வையற்றோர் குழுவின் வயலின் வாசிப்பு அவருக்கு பிலிம்பேர் விருது பெற்றுதந்தது.

இவர் ஒரு நாத்திகர் ஆவார்.

2018 பிப்ரவரியில் தனது கட்சி மற்றும் அதன் வழிகாட்டு கொள்கைகளை அறிவித்த கமல், தன்னுடைய அரசியல் அபிலாஷைகளை உண்மையாக்க இனி நடிக்கபோவதில்லை என அறிவித்தார்.

தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றை "பவர் ப்ரோக்கர்கள்" என விமர்சித்த கமல், அவர்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். தனது அரசியல் கட்சி மூலம் ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் உறுதியளித்தார்.இது அவரது கட்சிக்கு வலுவான அடித்தளமாக இருக்கும் என பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அரசியல் காலவரிசை

  • 2018
    பிப்ரவரி 2018 ல், கமல் ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

முந்தைய வரலாறு

  • 1972
    கல்விக்காக திரைப்படத்துறையில் ஒன்பது ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய கமல்ஹாசன், அடுத்த நான்கு தசாப்தங்களாக பல திரைப்படங்களில் நடித்து, நமது காலக்கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார்.
  • 1960
    கமல்ஹாசன் தனது 4 வயதில் களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தின் மூலம் திரைவாழ்வை துவங்கினார். ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக மேலும் ஐந்து திரைப்படங்களில் நடித்தார் .
நிகர மதிப்புN/A
சொத்துக்கள்N/A
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more