விருதாசலத்தில் இன்று விஜய்காந்த் கட்சி தேர்தல் அறிக்கை
பசுபதி பாண்டியன் மீது சரமாரி வெடிகுண்டு வீச்சு!
மனைவி பலி- எட்டயபுரம் அருகே பயங்கரம்!!
தேவேந்திர குல இளைஞர் பேரவை தலைவர் பசுபதி பாண்டியன் வந்த கார் மீது சரமாரியாக நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். பசுபதி பாண்டியனும், உடன் வந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஜெ. கட்டுரைகள்-நக்கீரனுக்கு நீதிமன்றம் அனுமதி
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட கட்டுரைகளை எழுத நக்கீரன் வார இதழுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உளவுத்துறை ரிப்போர்ட்: ஜெ-வைகோ-திருமா
மதுரை கூட்டம் ரத்து?
மதுரையில் ஒரே மேடையில் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
சத்தியமூர்த்தி பவனில் மீண்டும் கலாட்டா!
முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகனுக்கு சீட் கொடுக்கப்பட்டதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரூ.2க்குஅரிசி முடியாவிட்டால் ராஜினமா:பொன்முடி
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கிலோ அரிசி
13 வருட கணக்கை முடிக்க வேண்டும்: வைகோ
இந்த தேர்தல் ஒரு குருஷேத்திரம். திமுகவிடம் 13 வருட கணக்கை தீர்க்க வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
விருதாசலம்-இன்று விஜய்காந்த் தேர்தல் அறிக்கை
தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை தான் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில் இன்று விஜயகாந்த் வெளியிடுகிறார்.
இலங்கை தமிழ் மக்கள் பேரவை தலைவர் கொலை
இலங்கையின் திரிகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான விக்னேஸ்வரன் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை ராணுவத்தின் உதவியுடன் தான் இந்தக் கொலை நடந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
டி.ஆரை வளைக்கும் திமுக-ஸ்டாலின் சந்திப்பு
அதிமுக கூட்டணியில் நடிகர், நடிகைகள் பட்டாளம் கும்பல் கும்பலாக ரேட் பேசி இழுக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவின் முக்கிய சினிமா ஸ்டாரான சரத்குமார் மத்தியில் மந்திரி பதவி வாங்கித் தராவிட்டால் பிரச்சாரத்துக்கு வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து வருகிறார்.
வாக்காள சாமிகளே வணக்கம்!
கடவுளை நம்புவதை விட கடவுச் சீட்டை கையில் வைத்துள்ள வாக்காளர்களை நம்புவதே மேல் என்று வாக்காளர்களை கடவுளாக்கி பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் வால்பாறை எம்.எல்.ஏ. கோவை தங்கம்.
சிங்கி ஆன சிங் - தேர்தல் அட்டை கலாட்டா
சேலத்தில் தனசிங் என்ற வாலிபரின் பெயரும், பாலினமும் பெண்ணாக காட்டப்பட்டு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸிலிருந்து வெளியேறினார் முக்தா!
காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவரும், மறைந்த மூப்பனாரின் நண்பருமான திரைப்படத் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளார்
தந்தை, சித்தி, பாட்டியைக் கொன்ற வாலிபர்
பாபநாசம் அருகே பணப் பிரச்சனை காரணமாக தந்தை, சித்தி, பாட்டி மூவரையும் வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
10 நாளில் எதிர்ப்பு அலை கிளம்பும்: ராமதாஸ்
இன்னும் பத்து நாளில் அதிமுக அரசுக்கு எதிரான அலை வீசும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கார்த்திக்குக்கு சிங்கம் சின்னம்: எதிர்த்து வழக்கு
நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், பார்வர்ட் பிளாக் கட்சி, கார்த்திக் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏப்ரல்06, 2006
அதிமுக செல்வாக்கு அதிகரிப்பு-கருத்து கணிப்பு
அதிமுக கூட்டணிக்கு கடந்த 2 மாதங்களில் செல்வாக்கு கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 167 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும் எனவும் புதிய கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மதமாற்ற தடை சட்டம்-பாஜக தேர்தல் அறிக்கை
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ வேட்பாளர் பட்டியல்: 8 புதுமுகங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் ஜெ.வை எதிர்த்து கார்த்திக்?
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட கட்சித் தலைமையும், கட்சியும் என்னைக் கேட்டுக் கொண்டுள்ளன. அதை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
காங் பட்டியல்- 18 பேருக்கு மீண்டும் சீட்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 18 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீயெல்லாம் ஆம்பளையா? வைகோவுக்கு
-ணஞண்ணீதயாநிதி மெட்ராஸ் பாஷையில் டோஸ்!!
வைகோவே, நீ சரியான ஆம்பளையாக இருந்தால், என்னை ஏன் 19 மாதம் பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தாய் என்று ஜெயலலிதாவிடம் கேள், பார்க்கலாம்.. உனக்கு அதற்கு தைரியம் இருக்கா என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடந்த திமுக கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் மெட்ராஸ் பாஷையில் படு ஹாட்டாக பேசினார்.
10 மணி பிரசாரம்-கருணாநிதி மீது ஜெ புகார்
திமுக தலைவர் கருணாநிதியின் தலையீட்டின் காரணமாகவே, கிராமப் புறங்களில் 11மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
மெளன விரதம் அனுஷ்டித்த வைகோ!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது தந்தை வையாபுரியின் நினைவு நாளையொட்டி புதன்கிழமை முழுவதும் மெளன விரதம் இருந்தார். இதனால் மாலை 4.30 மணிக்கு மேல்தான் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் டிஐஜி சிவனாண்டி!
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் உளவுத்துறையின் டிஐஜி சிவனாண்டியும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
காமெடி செந்தில் கூட்டத்தில் பாமக ரகளை!
நடிகர் செந்தில் கலந்து கொண்ட அதிமுக பிரசாரக் கூட்டத்தில் பாமகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சசி கும்பலின் மதுபான கொள்ளையை தடுத்தாலே
53 லட்சம் கலர் டிவி கொடுக்கலாம்-கருணாநிதி
தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 53 லட்சம் குடும்பத்திற்கு மட்டுமே கலர் டிவி வழங்கப்படும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் கலாட்டா ஆரம்பம்!
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அதிருப்தி அடைந்துள்ள பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த காங்கிரஸார் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டாலின் பிரச்சாரம் நாளை துவக்கம்
திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் நாளை (ஏப்ரல் 6) துவங்கி மே 6ம் தேதி வரை ஒரு மாதம் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
கேரளாவை கலக்க போகும் ஜெயா அம்மே!
முதல்வர் ஜெயலலிதா தனது கேரள மாநில பிரசாரத்தில் முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பேசி அசத்தத் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் பிரசாரம்: மாயாவதி தமிழகம் வருகை
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உ.பி.முதல்வருமான மாயாவதி தமிழகம் வருகிறார்.
மூமுக வேட்பாளர்கள்: சேதுராமன் போட்டியில்லை
பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் ஐந்து வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சேதுராமன் தேர்தலில் போட்டியிடவில்லை.
நம்பிக்கை இழக்கும் அதிமுக-ஸ்டார்களுக்கு வலை
சட்டசபைத் தேர்தல் களம் களை கட்டத் தொடங்கி விட்ட நிலையில் அதிமுக தரப்பில் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதை கண்கூடாகவே பார்க்க முடிகிறது.
ஏப்ரல்05, 2006
கருணாநிதியை திட்டிய அதிமுக வாலிபர் கொலை
சென்னை கொடுங்கையூரில் திமுக தலைவர் கருணாநிதியை திட்டிப் பேசிய அதிமுகவைச் சேர்ந்த வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
வயலுக்குள் இறங்கி ஓட்டு கேட்ட ஜெயலலிதா!!!
திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம், வயலில் இறங்கிச் சென்று ஓட்டு கேட்டார்.
திமுகவில் இணைந்தார் கே.பாக்கியராஜ்
டபுள் மீனிங் புகழ் நடிகர்-இயக்குனரான கே.பாக்கியராஜ் இன்று திமுகவில் இணைந்தார்.
சு.சுவாமி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு:
மைலாப்பூரில் சந்திரலேகா போட்டி
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திண்டிவனம் கட்சி டப்..டமார்..டுமார்
காங்கிரசில் கலகம் செய்து தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸை ஆரம்பித்த திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சியில் கலகம் ஏற்பட்டுள்ளது.
ஜெ வேனை தாக்க முயன்ற அதிமுகவினர் நீக்கம்!
பாண்டிச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி வேட்பாளராக நடிகர் ஆனந்தராஜ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதாவின் வேன் மீது கம்பு, கொடிகளை வீசி கலாட்டா செய்த கட்சியினர் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் ஒரே மேடையில் ஜெ-வைகோ-திருமா
மதுரையில் வரும் 8ம் தேதி ஒரே மேடையில் முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையில் இன்று திமுக கூட்டணி பிரசார
கூட்டம்
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது.
ஜெவிடம் கூலிக்கு மாரடிக்கும் நெ. கண்ணன்!
ஜெயலலிதாவிடம் காசு வாங்கிக் கொண்டு கூலிக்கு மாரடிக்கிறார் நெல்லை கண்ணன் என்று இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கருணாநிதிதான் அந்த அமிர்தவதி: வைகோ
ஆபாசமான அமிர்தவதி கதையைக் கூறிய திமுக தலைவர் கருணாநிதிதான், தனது மகனுக்கு முடி சூட்டுவதற்காக திமுக என்னும் மன்னனுக்கு விஷம் வைக்கும் அமிர்தவதியாக காட்சி தருகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தொண்டையில கிச் கிச்..கேப்டன் பிரசாரம் ரத்து
நடிகர் விஜயகாந்த்துக்கு மீண்டும் தொண்டையில் புண் ஏற்பட்டு வலி ஏற்பட்டுள்ளதால் அவரது பிரசாரம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதியின் காவிரி துரோகம்-ஜெ பிரசாரம்
காவிரிப் பிரச்சினையில் விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார். காவிரியில் நமது உரிமையைப் பெறும் வரை அதிமுக அரசு தீவிரமாக பாடுபடும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இன்னொரு வைகோ ஆவாரா வெ.கோ?
சென்னை தி.நகரில் நடந்த திமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அக் கட்சியின் பேச்சாளரான வெற்றி கொண்டான் பேசியதாவது:
பாண்டிச்சேரி: விஜய்காந்த் கட்சி வேட்பாளர்கள்
விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் பாண்டிச்சேரியில் போட்டியிடவுள்ள 14 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விஜய்காந்த் எல்லாம் ஜூஜூபி-அதிமுக
வேட்பாளர்
அம்மாவை எதிர்த்து பாலிவுட், பாலிவுட் நடிகர்களை நிறுத்தினால் கூட இருக்கும் சுவடே இல்லாமல் காணாமல் போவார்கள் என விருதாச்சலத்தில் நடிகர் விஜய்காந்தை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொன்னேரி காசிநாதன் கூறியுள்ளார்.
ஜெவுக்கு கருப்பு கொடி: பார்வர்ட் பிளாக் முடிவு
கடலாடி தொகுதியில் கார்த்திக்கின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்ட்யிடும் தங்கராஜ் பாண்டியன் கூறுகையில்,
வைகோவுக்கு பெரும் தோல்வி நிச்சயம்: பாமக
வைகோவுக்கு இன்னும் 5 வருடம் ஆனாலும் ஒரு எம்எல்ஏ கூட கிடைக்கப் போவதில்லை என மத்திய அமைச்சர் அன்புமணி கூறினார்.
ஜெ-வைகோ பிக்பாக்கெட் கூட்டணி: யெச்சூரி
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில்,












Click it and Unblock the Notifications