• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காவிரி-மத்திய அரசு தலையிட திமுக கோரிக்கை

By Staff
|

செல்போன் சிக்கலில் தயாநிதி-பிரதமர் தலையிட

டாடா கோரிக்கை

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வசம் உள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து தொழிலதிபர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புகார் கூறி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுக நடத்திய பண பேரம்: போன்

ஆதாரத்துடன் நிரூபித்த கார்த்திக்

பார்வர்ட் பிளாக் வேட்பாளரிடம் அதிமுகவினர் ரூ. 2 லட்சம் பேரம் பேசியதை போன் ஆதாரத்துடன் நிரூபித்தார் அக் கட்சியின் தலைவர் கார்த்திக்.

கருணாநிதிக்கு தடை கோரும் வைகோ

ஜாதி துவேஷத்தைத் தூண்டும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி பேசியிருப்பதால் அவரை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

தயாநிதி மீது சிபிஐயில் சு.சுவாமி புகார்

தமிழக சட்டசபைத் தேர்தலில் எங்களது கூட்டணிக்கு 25 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். எங்களது உதவியுடன்தான் யாரும் ஆட்சி அமைக்க முடியும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

ஜெவின் ஈ அடிச்சான் காப்பி-கருணாநிதி தாக்கு

கிருஷ்ணகிரியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,

திண்டிவனம் கட்சி வேட்பாளர் படுகொலை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பொன்னுச்சாமி படுகொலை செய்யப்பட்டார்.

சோனியா பிரசார விதிமீறல்-திமுகவுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது விதிமீறல் நடந்துள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங் கலாட்டா-கிருஷ்ணசாமி மகனுக்கு கல்தா

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான விஷ்ணு பிரசாத் திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சுயேச்சை வேட்பாளருக்கு துடைப்பக்கட்டை அடி

முன் பகையை மனதில் வைத்து, தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடும்பப் பெண்ணை தாறுமாறாக விமர்சித்துப் பிரசாரம் செய்த சுயேச்சை வேட்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சரத் ரசிகர்களை ரவுண்டி கட்டிய அதிமுகவினர்!

தஞ்சாவூரில் அதிமுகவினரும் சரத்குமாரின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நடு ரோட்டில் கட்டி, உருண்டு நாறினர்.

ஜெ. நகைகளின் மதிப்பு: ப.சிதம்பரம் கேள்வி

முதல்வர் ஜெயலலிதா தனது வருமான வரியைக் கூட முறையாக செலுத்தவில்லை என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி: ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது என்று அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக தேர்தலில் 60,000 மின்னணு எந்திரங்கள்

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 60,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

முஸ்லீம்களை காக்க தவறியவர் கருணாநிதி-திருமா

பாஜக கூட்டணியில் இருந்தபோது அந்தக் கட்சியை சந்தோஷப்படுத்த, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி வேட்டையாடியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஏப்ரல்28, 2006

தமிழகம்-மேலும் 2 நாள் கடும் வெயில் நீடிக்கும்

தமிழக கடலோரப் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

வைகோ போனது நல்லதாப் போச்சு-அன்பழகன்

திமுக கூட்டணியிலிருந்து ஒருவர் (வைகோ) போய் விட்டதால் இட நெருக்கடி மட்டுமல்லாமல் பல நெருக்கடிகள் குறைந்துள்ளன என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார்.

கோவையில் அத்வானி பிரசாரம்-தீவிர பாதுகாப்பு

பாஜக தலைவர் எல்.கே.அத்வானி வரும் 30ம் தேதி கோவையில் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு தினமணிக்கு

தயாநிதி நோட்டீஸ்- உயர் நீதிமன்றத்திலும் வழக்கு

டாடா நிறுவனத்தை நான் மிரட்டியதாக புரளி கிளப்பி வருகிறார்கள், அந்தப் புகார்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

இரண்டு, அரண்டு, உருண்டு, புரண்டு!

வைகோ இப்போது போடுகிறார் வேஷம், அவருக்குக் கிடையாது ரோஷம் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.

எஸ்.சி.வி மிரட்டுகிறது: விண் டிவி புகார்

திமுகவுக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் ஒளிபரப்பை முழுமையாகத் துண்டித்து விடுவோம் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் தங்களை மிரட்டி வருவதாக விண் டிவி நிர்வாக இயக்குனர் தேவநாதன் கூறியுள்ளார்.

நான் கள்ள ஓட்டு கம்பெனி தலைவன்: எஸ்.எஸ்.

திமுகவில் இருந்தபோது நான்தான் கள்ள ஓட்டு கம்பெனிக்கே தலைவன். எனவே திமுவினர் எப்படி கள்ள ஓட்டுப் போடுவார்கள்என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்-வீரமணி

தமிழகத்தை தமிழன் ஆண்டால் தான் மாநிலம் உருப்படும் என திக தலைவர் கி.வீரமணி கூறினார்.

ஜெ வருகை: கிருஷ்ணசாமிக்கு நோ-பர்மிஷன்

பிரதமர் மன்மோகன் சிங் வரும் மே 4ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.

விசுவை அதிமுகவுக்கு கூட்டிச் சென்ற மனசாட்சி

அதிமுகவில் சேருமாறு எனது மனசாட்சி சொன்னதால் நான் அக்கட்சியில் சேர்ந்தேன் என்று இயக்குனர் விசு கூறியுள்ளார்.

தேமுதிக பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

கபிலர்மலை தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக பெண் வேட்பாளர் செல்விக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு கோரி தேர்தல் அதிகாரியிடம் செல்வி புகார் கொடுத்துள்ளார்.

இலங்கை: இந்தியா தலையிட ராமதாஸ் கோரிக்கை

- மீண்டும் அமைதிப் பேச்சு?

இலங்கையில் மீண்டும் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்திய அரசு தலையிட்டு சிங்கள பேரினவாத அரசின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

அமைச்சரை திருப்பி விரட்டிய கிராம மக்கள்

பல்லடத்தில் ஓட்டு கேட்கச் சென்ற அமைச்சர் தாமோதரனை கிராம மக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.

உசிலம்பட்டியில் கார்த்திக் கலக்கல் பிரச்சாரம்

அதிமுகவின் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் உசிலம்பட்டியில் சிங்கம் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது என கார்த்திக் கூறினார்.

விஜய் ரசிசர்கள் மீது சரத்குமார் புகார்

மதுரையில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமார் நிருபர்களிடம் பேசுகையில்,

அற்புதங்கள் செய்ய காத்திருக்கிறேன்: ஜெ

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவும் கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

ஹிட்லரை தோற்கடித்த ஜெயலலிதா: அன்புமணி

தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வரும் எல்லா நல்ல திட்டங்களையும் தடுத்தவர் ஜெயலலிதா என மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்

திருச்சி-தீ விபத்தில் 2 பேர் பலி-9 பேர் காயம்

திருச்சி அருகே வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஏப்ரல்27, 2006

தயாநிதியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க

ஜெ-வைகோ-பாஜக-சு.சுவாமி-சரத் கோரிக்கை

டாடா நிறுவனத்தை கேவலமாக மிரட்டியன் மூலம் தான் அமைச்சர் பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லை என்பதை தயாநிதி மாறன் நிரூபித்துள்ளார். அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வெற்றி சிகரத்தை நோக்கி திமுக: கருணாநிதி

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் 4 நாட்களுக்கு தண்ணி கிடையாது!

சட்டசபைத் தேர்தலையொட்டி மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டில் ஒருவருக்கு வேலை: ஜெ மீண்டும் உறுதி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தில் கடும் வெப்பம்-காரணம் மாலா!!

என் பேச்சில் சத்தியத்தின் குரல் இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

கார்த்திக் வேட்பாளருக்கு துப்பாக்கி போலீஸ்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்: மடக்க வரும் கர்நாடக குழு

காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை சமாதானப்படுத்த 16 பேர் கொண்ட குழு தமிழகம் வரவிருப்பதாக மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சிக்கலாகிறது சிங்கம்-சிறுத்தை விவகாரம்

ஜாதிகள் குறித்து தேவையில்லாத கருத்துக்களைக் கூறி தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்பட வழி செய்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

தினகரனை கைது செய்ய உத்தரவிட்டது சரியே

சசிகலாவின் அண்ணன் மகன் தினகரனை காபிபோஸா சட்டத்தின் கீழ் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலவச சைக்கிளில் ரூ.100 கோடி ஊழல்-ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் வெறும் கலர் டிவியை மட்டும் தர மாட்டோம், கூடவே கேபிள் இணைப்பும் கொடுப்போம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடவுளே எனக்காக ஓட்டு போடுவார்-விஜயகாந்த்

மக்கள் மூலமாக கடவுளே எனக்காக ஓட்டுப் போட வைப்பார் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

வாய்க்கு வந்தபடி பேசும் கருணாநிதி: திருமா

தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

என் குரல் சத்தியத்தின் குரல்-சொல்லும் வைகோ

என் பேச்சில் சத்தியத்தின் குரல் இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தமிழ்நாடு நாடார் பேரவை திமுகவுக்கு ஆதரவு

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு நாடார் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.

மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் கராத்தே!

197 நாட்களுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு துணை மேயர் கராத்தே தியாகராஜன் இன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி சிறையில் தமிழ் தீவிரவாதிகள்

உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இயக்கத் தொண்டர்கள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

160 பேர்: பெண் வேட்பாளர்கள் வரலாறு

இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பெண் வேட்பாளர்கள் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஜெ சொத்து முடக்கம்-வழக்கை விசாரிக்க தடை

முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து முடக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஏப்ரல்26, 2006

டாடாவை மிரட்டினாரா தயாநிதி?:வைகோ கிளப்பிய புயல்

டாடா நிறுவனததின் டிடிஎச் சேவை திட்டத்தை சன் டிவியிடம் ஒப்படைத்து விடுமாறு இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாநிதி மீது ஜெயா டிவியில் சோ பாய்ச்சல்

தொழிலதிபர் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிநதி மாறன் மிரட்டியதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி ஜெயா டிவியில் தெரிவித்துள்ள கருத்து:

தேர்தலில் ஐஐடி மாணவர்கள்-7 இடத்தில் போட்டி

சென்னை ஐஐடி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள லோக் பரித்ரன் கட்சி தமிழகத்தில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஒங்கும் கேப்டன் கை-ஒடுக்க வரும் தங்கர் டீம்

விருத்தாச்சலம் தொகுதியில் நடிகர் விஜயகாந்த்துக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே போவதால் அதிமுக, பாமக ஆகியவை பீதியடைந்துள்ளன.

காவிரி-புது கமிட்டி அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு

காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி இன்னொரு கமிட்டியை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரைச் சந்திக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திமுகவினருக்கு கருணாநிதி எச்சரிக்கை

வீட்டுக்கு ஒளியேற்றும் விளக்கு வேண்டுமா அல்லது காட்டுத் தீ வேண்டுமா என்பதை இந்த சட்டசபைத் தேர்தல் மூலம் தமிழக மக்கள் முடிவு செய்யட்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஆளே இல்லாவிட்டாலும் சு.சுவாமி பிரச்சாரம்!

நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

சீமாட்டி ஜெ. சீமானிடம் தோற்பார்: ராமதாஸ்

மே 14 அல்லது 15ம் தேதி கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

அரட்டை அரங்கத்துக்கு சன் டிவி ஆப்பு!:

எஸ்வி சேகர் தூண்டில்- அதிமுகவில் விசு!

நாடக, சினிமா நடிகர், இயக்குனரான அரட்டை அரங்கம் புகழ் விசு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இணைந்த கையோடு எதிர்பார்த்தது மாதிரியே சன் டிவி மீது பல்வேறு புகார்களை அடுக்கினார்.

சிவகங்கை சின்னப் பையன்: வைகோ தாக்கு

ப.சிதம்பரம் இந்தியாவுக்கு நிதி மந்திரியா? இல்லை செட்டி நாட்டுக்கு மட்டும் நிதி மந்திரியா என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

கடத்தல்- கலாமிடம் லீலாவதி புகார்

ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது கடத்தப்பட்ட எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி அது குறித்து ஜனாதிபதி கலாமுக்கும், மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பியுள்ளார்.

என் வெற்றியே உங்கள் வெற்றி: ஜெயலலிதா

இன்னொரு பொற்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்ல அன்புச் சகோதரியின் அரசுக்கு வாக்களியுங்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

ஜெவும் ராசியில்லா 8ம்: நல்லகண்ணு கிண்டல்

வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்தில், ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில் இன்று நடிகைகள் பிரசாரம் செய்யும் அளவுக்கு தமிழக அரசியல் தரம் தாழ்ந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் வருத்தத்துடன் கூறினார்.

ஜெயலலிதாவின் நகைகள்: ப.சிதம்பரம் கேள்வி

சுனாமி நிதி முறைகேடுகள் குறித்து பொது மேடையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் விவாதிக்க நான் தயார், அவர் ரெடியா என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சவால் விட்டுள்ளார்.

கார்த்திக்குக்கு தடை: இளையான்குடியில் பதற்றம்-

போலீஸ் குவிப்பு

கார்த்திக்கை பிரச்சாரம் செய்ய விடாமல் போலீசார் தடுத்ததால் இளையான்குடி பகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும் முக்குலத்தோர் சமூகத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு நன்றி- வெற்றி நமதே: சோனியா

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. தமிழகத்திலும் வரும் காலத்தில் சாதனைகள் புரிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

...மேலும்

Mail this to a friend  Post your feedback  Print this page திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more