For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க கூட செல்போனில் பேசினது ஒரு பெண்ணா...?.. பைவ் ஸ்டார் துரோகம் (32)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வேல்முருகன் பதட்ட குரலில் செல்போனில் பேச்சைத் தொடர்ந்தார்.

“ஸார்..... உங்க கூட செல்போனில் பேசினது ஒரு பெண்ணா...? “

“ஆமா.... “

“அநேகமாய் அது மிருணாளினியாய் இருக்கலாம் ஸார்“

rajesh kumar series five star dhrogam 29-10-2018

“எனக்கும் அந்த சந்தேகம்தான்..... பை...த .....பை இப்போ முகில்வண்ணனோட மகன் செந்தமிழ் எங்கே இருக்கார்ன்னு எந்த நிலைமையில் இருக்கார்ன்னு அந்தப் பெண் போன்ல சொல்லலை.... மறுபடியும் எனக்கு போன் வரலாம். அதுவரைக்கும் நீங்க அதே இடத்துல இருங்க........! “

“ எஸ்......ஸார்“

“நீங்க இப்போ ஒரு கட்டிடத்துக்கு முன்னாடிதான் நின்னுட்டு இருக்கீங்க ...? “

“ஆமா... ஸார் “

“அது என்ன கட்டிடம் ...? “

“தெரியலை ஸார்..... கட்டிடத்துக்குள்ளே கொஞ்சம் வெளிச்சம் இருக்கு....... “

“சரி..... நீங்க மெல்ல நடந்து போய் அது என்ன கட்டிடம்.... முன்னாடி பெயர் பலகை ஏதாவது இருக்கான்னு பாருங்க. நான் லைன்ல வெயிட் பண்றேன்........! “

“ எஸ்......ஸார்“ வேல்முருகன் காதுக்கு செல்போனை ஒட்ட வைத்தபடி அந்தக் கட்டிடத்தை நோக்கிப் போனார். பெரிய காம்பெளண்ட் கேட் சாத்தப்பட்டிருக்க, அதன் இடதுபுறம் பெயர்ப்பலகை தெரிந்தது.

“அது என்ன பெயர்...? “

மனசுக்குள் கேள்வி முளைக்க, வேல்முருகன் பெயர்ப்பலகைக்கு அருகே சென்று பார்த்தார்.

“அமிர்தம் மருத்துவமனை“ என்ற எழுத்துக்கள் பார்வைக்கு தட்டுப்பட்டன.

“ஸார்... இது ஒரு ஹாஸ்பிடலோட கட்டிடம். பேரு அமிர்தம் ஹாஸ்பிடல். மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் மாதிரி தெரியுது..... “

“நல்லாப் பாருங்க வேல்முருகன் ஹாஸ்டலா.... ஹாஸ்பிடலா...? “

“ஹாஸ்பிடல்தான் ஸார்“

“பெயர்ப்பலகையில் டாக்டர் பேர் இருக்கா ...? “

“இல்லை ஸார் ...“ என்று சொன்ன வேல்முருகன் கேட்டார்.

இப்ப நான் என்ன ஸார் பண்றது.... ஹாஸ்பிடலுக்குள்ளே போய் பார்க்கட்டுமா ...? “

“வேண்டாம்.... ஒரு அஞ்சு நிமிஷம் ... ஹாஸ்பிடலுக்கு வெளியே வெயிட் பண்ணுங்க..... என்னுடைய வாட்ஸ் அப்புக்கு மெஸேஜ் வந்ததும் அதை உங்களுக்கு அப்படியே பார்வேர்ட் பண்றேன் “ கமிஷனரின் செல்போன் இணைப்பு அறுந்து போக வேல்முருகன் எரிச்சலாகி சுற்றும் முற்றும் பார்த்தார்.

அந்த தெருவிலேயே ஹாஸ்பிடல் மட்டும் பிரதான கட்டிடமாய் தெரிய சிறிய ரக வீடுகளும், கட்டிடங்களும் இருட்டில் கரைந்து மங்கலாய்த் தெரிந்தன. தெருவோரமாய் மெல்ல நடை போட்டார்.

சரியாய் பத்து நிமிஷம் கழித்து கமிஷனரிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்தது.

“வேல்முருகன்“

“ஸார்“

“அந்தப் பெண் மறுபடியும் எனக்கு போன் பண்ணி பேசினா. நீங்க முகில்வண்ணனோட மகன் செந்தமிழை பார்த்து இருக்கீங்களா ...? “

“நேர்ல பார்த்தது இல்லை ஸார்.... ஆனா போட்டோவில் பார்த்திருக்கேன்... “

“சரி..... ஹாஸ்பிடலுக்குள்ளே போங்க. ரூம் நெம்பர் 49-ல் செந்தமிழ் அட்மிட் செய்யப்பட்டிருக்கார்“

“அவரோட உடம்புக்கு என்ன ஸார் ...? “

“அந்த விபரம் தெரியலை. நீங்க போய் பார்த்துச் சொன்னாத்தான் எனக்குத் தெரியும்“

“நான் உடனே போய் பார்க்கிறேன் ஸார்“ வேல்முருகன் செல்போனை மெளனமாக்கிக் கொண்டே ஹாஸ்பிடலின் காம்பெளண்ட் கேட்டை நோக்கிப் போனார். லேசாய் சாத்தப்பட்டிருந்த கதவைத் திறக்க முயல உள்ளே ஸ்டூலில் உட்கார்ந்திருந்த வாட்ச்மேன் எழுந்து ஓடி வந்தார்.

“யார் ஸார் ...? “

“டாக்டர் உள்ளே இருக்காரா ...? “

“சீஃப் டாக்டர் இல்லை..... ட்யூட்டி டாக்டர்ஸ் இருக்காங்க. நீங்க யாரைப் பார்க்கணும் ஸார் “

“ஒரு பேஷண்டை “

“ஸார்.... இந்த நேரத்துல பேஷண்ட்ஸ் யாரையும் பார்க்க அனுமதி கிடையாது........! “

“போலீஸூக்குக் கூடவா...? “

வேல்முருகனின் உயரத்தையும், திடகாத்திரமான உடம்பையும் பார்த்து சற்றே மிரண்டு பின்வாங்கிய வாட்ச்மேன் வாய் உலர்ந்து போனவராய் பவ்யமாய் கும்பிடு ஒன்றைப் போட்டார்.

“உள்ளே போங்க ஸார்“

வேல்முருகன் ஹாஸ்பிடலின் பிரதான கட்டிடத்தை நோக்கி நடந்தார். வரிசையாய் அணிவகுத்திருந்த குரோட்டன்ஸ் தொட்டிகளுக்கு இடையே இருந்த சிமெண்ட் பாதையில் நடந்து எதிர்பட்ட கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே போனார். நீளமான க்ரானைட் வராந்தா ட்யூப்லைட்களின் வெளிச்சத்தில்

வெறிச்சோடிப் போய்த் தெரிந்தது.

வராந்தாவின் பாதி தூரத்தைக் கடந்து இருந்த போது எதிரே வெள்ளைக்கோட் தரித்து, கழுத்தில் ஸ்டெத்தோடு அந்த நடுத்தர வயது டாக்டர் முன்பக்க வழுக்கை மின்ன நிதான நடை போட்டு வந்து கொண்டிருந்தார். வேல்முருகன் அவரை நிறுத்தினார்.

“எக்ஸ்க்யூஸ்மீ.......! “

அவர் என்ன ? என்பது போல தலையசைத்தார்.

“அயோம் வேல்முருகன்....ஃப்ரம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் “

டாக்டரின் உடம்பு ஒரு சின்ன நடுக்கத்துக்கு உட்பட்டு இயல்புக்குத் திரும்பியது. குழப்பமான முகத்தோடு கேட்டார்.

“எனிதிங்க் இம்பார்ட்டண்ட்...? “

“எஸ்..... ஒரு பேஷண்டை பார்க்கணும்.....! “

“பேஷண்ட் நேம் ...? “

“செந்தமிழ் .....! “

டாக்டர் தன் இடது கையின் ஆட்காட்டி விரலால் நெற்றியைக் கீறிக் கொண்டே யோசித்துவிட்டு “ நீங்க சொல்ற அந்த பேர்ல இங்கே எந்த பேஷண்ட்டும் அட்மிட்டாகியிருக்கிற மாதிரி தெரியலையே..... அவரோட உடம்புக்கு என்ன ...? “

“தெரியாது.... ஆனா அந்த பேஷண்ட் அட்மிட்டாகியிருக்கிற ரூம் நெம்பர் 49“

டாக்டர் முகம் நிறைய திகைப்பது தெரிந்தது.

“49 எண் அறையில் அட்மிட்டாகியிருக்கிற நபரை உங்களுக்கு தெரியுமா ...? “

“தெரியும் “

“அவர் பேர் என்ன சொன்னீங்க ஸார்...? “

“செந்தமிழ் .....“

“ரெண்டு மணி நேரத்துக்கு முந்திதான் அந்த பேஷண்ட்டை யாரோ ஒரு நபர் இங்கே கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டு போனார்.... “

வேல்முருகன் ஆர்வமானார். “அட்மிட் பண்ணின நபர் யாரு...? “

“அந்தக் குழப்பத்தில்தான் இப்போ ட்யூட்டி டாக்டர்ஸ் மூணு பேரும் இருக்கோம்....... “

“என்ன குழப்பம் ...? “

“ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு ட்யூட்டி டாக்டர்ஸ் நாங்க மூணு பேரும் காஸூவாலிடி வார்டில் இருந்த போது ஒரு டாக்ஸி ஹாஸ்பிடலுக்குள்ளே வேகமாய் வந்தது. அதிலிருந்து பதட்டத்தோடு இறங்கிய ஒரு நபர் வார்டுக்குள்ளே வந்து ஒரு பேஷண்ட்டை உயிருக்கு ஆபத்தான நிலைமையில் கொண்டு வந்து இருக்கேன். உடனடியாய் அட்டெண்ட் பண்ணுங்க டாக்டர். நான் டாக்ஸியை அனுப்பிவிட்டு வர்றேன்னு வெளியே போனார். நாங்க உடனடியாய் டாக்ஸிக்குள்ளே மயக்கமான நிலைமையில் இருந்த அந்த இளைஞனை ஐ.ஸி.யூனிட்டுக்கு கொண்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுக்க ஆரம்பிச்சோம். ஆனா டாக்ஸியை அனுப்பிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வெளியே போன அந்த நபர் அதுக்கப்புறம் எங்க கண்ணிலேயே படலை. உடனே நாங்க ட்ரீட்மெண்ட்டை நிறுத்திட்டோம். வெளியூர்ல இருக்கிற சீஃப் டாக்டர்க்கு தகவல் கொடுத்தோம். அவர் பேஷண்ட்டை உடனடியாய் ஐ.ஸி.யூனிட்டிலிருந்து மாற்றி அறைக்குக்கொண்டு போய் முதலுதவி மாதிரியான ட்ரீட்மெண்ட்டை மட்டும் கொடுத்து நாளைக்குக் காலை வரை வெயிட் பண்ணி பார்க்கச் சொன்னார். நாங்களும் சீஃப் டாக்டர் சொன்ன மாதிரியே ஐ.ஸி.யூனிட்டிலிருந்து சாதாரண ரூமுக்கு மாத்திட்டோம். இப்போதைக்கு ட்ரிப்ஸ் மட்டும் போயிட்டிருக்கு.... நாளைக்குக் காலை வரை பார்த்துட்டு போலீஸூக்கு இன்ஃபார்ம் பண்ணிடலாம்ன்னு இருந்தோம். அதுக்குள்ளே போலீஸ் டிபார்ட்மெண்டிலிருந்து நீங்களே வந்துட்டீங்க.... அந்த பேஷண்ட் யார்ன்னு உங்களுக்கு தெரியுமா ஸார் “

“தெரியும்....... அவர் பேர் செந்தமிழ். எக்ஸ் சி.எம். முகில்வண்ணனோட மகன் கடந்த சில மணி நேரமாய் அவரைக் காணோம்ன்னு புகார். அது விசாரணையில் நான் இருந்தபோதுதான் இந்த ஹாஸ்பிடல்ல 49 எண் ரூம்ல அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் எனக்கு கிடைச்சது. அது உண்மையான்னு தெரிஞ்சுக்கத்தான் இங்கே வந்தேன். பை...த .....பை இப்போ செந்தமிழை பார்க்கலாமா ...? “

“பார்க்கலாம்.... வாங்க ஸார்.......“ டாக்டர் சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட வேல்முருகன் பின் தொடர்ந்தபடி கேட்டார்.

“டாக்டர்.... செந்தமிழின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே.! “

“இப்போதைக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனா நாளைக்கு நிலைமை எப்படியிருக்கும்ன்னு சொல்ல முடியாது“

“அவரோட உடம்புக்கு என்ன பிரச்சினை ...? “

“அவரோட உடம்புக்குள்ளே ஒரு விபரீதமான பிரச்சினையை யாரோ உண்டாக்கியிருக்காங்க“

“விபரீதமான பிரச்சினையா ...? “

“எஸ்..... அவரோட உடம்புக்குள்ளே யாரோ இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் மருந்தைச்செலுத்தியிருக்காங்க.... “

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 32
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X