For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுக்கெல்லாம் காரணம் அந்த மிருணாளினிதான்... பைவ் ஸ்டார் துரோகம் (33)

Google Oneindia Tamil News

- ராஜேஷ்குமார்

வேல்முருகன் அதிர்ந்து போனவராய் கேட்டார்.

"என்ன டாக்டர் ....... சொன்னீங்க....... இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் மருந்தா ...? "

"எஸ்..... "

"அந்த இஞ்செகஷனை ஒருத்தர்க்குப் போட்டா அவங்க உடம்புக்குள்ளே எது மாதிரியான பிரச்சினை ஏற்படும் ...? ஏதோ விபரீதம்ன்னு சொன்னீங்க...? "

"ஆமா.... அந்த இஞ்செகஷன்ல மூணு டைப் இருக்கு. மூணுமே மனிதனோட நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்டவை. நோயாளி ஒருவர்க்கு அந்த மருந்தை சரியான அளவில் செலுத்தினால் நரம்பு கோளாறுகள் சரியாகும். ஆனால் மருந்தின் அளவை அதிகப்படுத்தினால் ஒட்டு மொத்த நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்...... "

rajesh kumar series five star dhrogam

செந்தமிழுக்கும் அது மாதிரியான பாதிப்புதான் ஏற்பட்டிருக்கா ...? "

"அதற்கான அறிகுறிகள் தெரியுது. .... ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு அவரை ஐ.ஸி.யூனிட்டில் வைத்து ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருந்த போது அவர்க்கு லேசாய் நினைவு திரும்பியது. அவரைப் பத்தின தகவல்களை தெரிஞ்சுக்கிறதுக்காக பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம். அவரால பேச முடியலை..... கஷ்டப்பட்டு பேச முயற்சி பண்ணின போது மயக்கமாயிட்டார். அவரோட உடம்புக்கு என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக ரத்த மாதிரி எடுத்து சோதனை பண்ணிப்பார்த்த போது அவரோட ரத்தத்தில் இண்ட்ரா மஸ்குலர் இஞ்செகஷன் மூலம் செலுத்தப்பட்ட ஒரு வகை மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது....... "

"டாக்டர்.... செந்தமிழோட உயிர்க்கு ஆபத்து இல்லைன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னே சொன்னீங்க. ஆனா இப்ப நீங்க சொல்ற விபரங்களைப் பார்த்த அவரோட நிலைமை ரொம்பவும் சீரியஸாய் இருக்கும் போலிருக்கே ...? "

"எஸ் சீரியஸ்தான். ஆனா அவரோட பி.பி. லெவல், பல்ஸ்ரேட் எல்லாமே சிறப்பான முறையில் இருக்கு..... அதனால்தான் உயிர்க்கு ஆபத்து இல்லைன்னு சொன்னேன். ஆனால் இனிமேல் வரப்போகும் நிமிஷங்களில் செந்தமிழோட ஹெல்த் கண்டிஷன் எப்படியிருக்கும்ன்னு எனக்குத் தெரியாது......" அந்த ட்யூட்டி டாக்டர் சொல்லிக்கொண்டே சாத்தப்பட்டு இருந்த ஒரு பக்கவாட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்.

அறை அவ்வளவு சுத்தமாய் இல்லை. பெயிண்ட் பூச்சு உதிர்ந்து போன சுவர்கள். மங்கலாக எரிந்து கொண்டிருந்த ஒரு மஞ்சள் நிற குண்டு பல்பு. சுவரோரமாய் போடப்பட்டிருந்த ஒரு சாதாரண இரும்பு கட்டிலில் அழுக்கான பச்சை நிற போர்வை போர்த்தப்பட்டு செந்தமிழ் தெரிந்தான். உடம்புக்குள்ளே துளிதுளியாய் ட்ரிப்ஸ் போய்க்கொண்டிருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் அவன் இருப்பதற்கு அடையாளமாய் வாய் லேசாய் பிளந்திருக்க மார்பு சீரான இடைவெளியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

வேல்முருகன் செந்தமிழைப்பார்த்து விட்டு ட்யூட்டி டாக்டரிடம் திரும்பினார்.

"இவர் சாதாரண நபர் இல்லை. முன்னாள் முதலமைச்சரோட மகன். அவரை இப்படிப்பட்ட ரூம்ல வெச்சு ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு இருக்கீங்களே..? "

"ஸாரி ஸார் ..... இவர் எக்ஸ் சி.எம்.மோட மகன்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும். இப்ப உடனடியாய் இவரை ஐ.ஸி.யூனிட்டுக்கு மாத்தி இதுக்கு முன்பு கொடுத்துட்டிருந்த இன்டென்சிவ் கேர் ட்ரீட்மெண்ட்டை கண்டின்யூ பண்ணிடறோம்"

சொன்ன ட்யூட்டி டாக்டர் தன்னுடைய கோட் பாக்கெட்டினின்றும் செல்போனை எடுத்து யாரையோ தொடர்பு கொண்டு பேசினார். அதே விநாடியில் வேல்முருகனின் செல்போனும் ம்யூட் மோடில் வெளிச்சமாய் ஒளிர்ந்து யாரோ அழைப்பதை உணர்த்தியது. எடுத்துப்பார்த்தார். போனின் டிஸ்ப்ளேயில் போலீஸ் கமிஷனரின் பெயர்.

அறையை விட்டு வெளியேறி வராந்தாவின் ஜன்னல் ஓரமாய் போய் நின்று கொண்டு பேச ஆரம்பித்தார் வேல்முருகன்.

"ஸார்.....! நானே உங்களுக்கு போன் பண்ணி பேசலாம்ன்னு இருந்தேன்" என்று ஆரம்பித்தவர் எல்லா விஷயங்களையும் நிதானமான குரலில் சொல்லி முடிக்க மறுமுனையில் கமிஷனர் ஆதிமுலம் பதறினார்.

"செந்தமிழை எப்படியாவது நாம் காப்பாற்றியாகணும் வேல்முருகன். அந்த ஹாஸ்பிடலில் லேட்டஸ்ட் மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸ் இருக்கான்னு பாருங்க. இல்லேன்னா வேற ஹாஸ்பிடலுக்கு போயிடலாம்"

"இதுவும் ஒரு மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்தான் ஸார்..........."

"சீஃப் டாக்டர் பேர் என்ன ...? "

"தெரியலை ஸார் ...... இனிமேல்தான் கேட்கணும்"

"வேல்முருகன்.....! முகில்வண்ணனோட ஃபேமிலி மெம்பர்ஸ் மேல யார்க்கு கோபம்ன்னு தெரியலை. சம்பவங்கள் எல்லாம் விபரீதமாய் போயிட்டிருக்கு"

"ஸார்..... இதுக்கெல்லாம் காரணம் அந்த மிருணாளினிதான்... "

"நான் அப்படி நினைக்கலை.... "

"என்ன ஸார் சொல்றீங்க ...? "

"மிருணாளினி ஒரு சாதாரண குடும்பப் பெண். முகில்வண்ணன் மாதிரியான ஒரு நபரை எதிர்த்து இப்படிப்பட்ட காரியங்களை செய்ய முடியுமா ..... கொஞ்சம் யோசியுங்க வேல்முருகன்...? "

"ஸார்..... உங்க கூட போன்ல பேசினது ஒரு பெண்தானே..? "

rajesh kumar series five star dhrogam

"பெண்தான்.... ஆனா அவள் மிருணாளினியாகத்தான் இருக்கணுமா ..? வேறு ஒரு பெண்ணாகவும் இருக்கலாமே..? "

"ஸார்..... மிருணாளினி தவறு செய்யாத பட்சத்தில் ஏன் தலைமறைவாய் இருக்கணும் ..?"

"போலீஸ் தன்னைத் தேடறாங்களே என்கிற பயம் கூட காரணமாய் இருக்கலாம்............. "

"ஸார்..... நான் மேற்க்கொண்டு என்ன செய்யணும்.... செந்தமிழ் இதே ஹாஸ்பிடலில் இருக்கட்டுமா ....... ? இல்லை சிட்டியில் இருக்கிற வேற ஏதாவது ஒரு நல்ல ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிடலாமா ..?"

"வேண்டாம்..... இப்போதைக்கு அதே ஹாஸ்பிடலில் செந்தமிழ் ட்ரீட்மெண்ட்டில் இருக்கட்டும். செந்தமிழ் இது போன்ற நிலைமையில் இருப்பது முகில்வண்ணனுக்குத் தெரிய வேண்டாம். அவரோட ஹெல்த் கண்டிஷன் இப்போ சரியில்லை. எந்தவிதமான ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தையும் அவருடைய கவனத்துக்கு கொண்டு போக வேண்டாம்ன்னு ஃபேமிலி டாக்டர் சதாசிவம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் என்கிட்டே சொன்னார் "

"டாக்டரோட பாயிண்ட் ஆஃப் வ்யூவில் அவர் சொல்றது சரிதான் ஸார். ஆனா செந்தமிழ் எங்கேன்னு முகில்வண்ணன் கேட்கும்போது அவர்க்கு நாம சொல்லக்கூடிய பதில் என்ன ..?"

"ஏதாவது சொல்லி சமாளிக்கணும்... அந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். உங்க அட்டென்ஷன் பூராவும் செந்தமிழ் மேல இருக்கட்டும்.... ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகியிருக்கிற விஷயம் மீடியாக்களுக்கு தெரியாமல் பார்த்துக்க வேண்டிய வேலை உங்களோடது. பி... அலர்ட்"

" எஸ்......ஸார்"

" ஏதாவது ஒரு முக்கியமான விஷயமாய் பேச எனக்கு போன் பண்ணனும்ன்னு நினைச்சா ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு வெயிட் பண்ணுங்க..... "

" எஸ்......ஸார்"

மறுமுனையில் போலீஸ் கமிஷனர் செல்போனின் இணைப்பை துண்டித்துவிட வேல்முருகன் ஒரு பெருமூச்சோடு திரும்பினார். ட்யூட்டி டாக்டர் நின்றிருந்தார். சொன்னார்.

"ஸார்..... வெளியூரிலிருந்து சீஃப் டாக்டர் பேசினார். அவர்கிட்டே நான் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன். அவரும் நாளைக்குக் காலையில் உடனடியாய் புறப்பட்டு வர்றேன்னுட்டார்"

"சீஃப் டாக்டரோட பேர் என்ன ..?"

"லட்சுமிகாந்தன் ஸார் "

"இப்ப அவர் எங்கே போயிருக்கார்..?"

"செங்கல்பட்ல அவர்க்கு இன்னொரு ஹாஸ்பிடல் இருக்கு ஸார். வாரத்துல மூணு நாள் அங்கே போயிடுவார். நாளைக்குக் காலையில் வந்துடுவார்...."

"செந்தமிழை ஐ.ஸி.யூனிட்டுக்கு கொண்டு போயிட்டீங்களா ..?"

"டோண்ட் வொர்ரி ஸார்...... அதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. இனி அவர்க்கு கொடுக்கக்கூடிய ட்ரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும்....... "

"பை.....த.......பை......... டாக்டர்"

"சொல்லுங்க ஸார் "

"செந்தமிழ் இங்கே அட்மிட்டாகியிருக்கிற விஷயம் வெளியே யார்க்கும் தெரியக்கூடாது. இது போலீஸ் கமிஷனரோட உத்தரவு. உங்க சீஃப் டாக்டருக்கு போன் பண்ணிச் சொல்லிடுங்க........ "

"இப்ப சொல்லிடறேன் ஸார் "

அப்புறம் டாக்டர்..... செந்தமிழை யாரோ ஒரு நபர் டாக்ஸியில் கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டு போனதாக சொன்னீங்க இல்லையா...? "

"ஆமா..... ஸார் "

அந்த சம்பவம் சி.சி.டி.வி.காமிராவில் பதிவாயிருக்கும். அந்த காமிரா ஃபுட்டேஜ்ஜை வாங்கிப் பார்த்தீங்களா ...? "

"ஸாரி ஸார் ..... அந்த டாக்ஸி வந்து நின்ற பார்க்கிங் ஏரியாவில் சி.சி.டி.வி.காமிராவை ஃபிக்ஸ் பண்ணலை... பொதுவாய் அந்த இடத்துல எந்த ஒரு வாகனமும் நிக்காது"

"செந்தமிழை அட்மிட் பண்ண வந்த நபரை நீங்க பார்த்தீங்களா ...? "

"நாங்க ட்யூட்டி டாக்டர்ஸ் யாருமே பார்க்கலை. ஸ்ட்ரெச்சரோடு போன ரெண்டு ஆர்டர்லீஸ் கூட அந்த நபரை சரியாய் கவனிக்கலை. பேஷண்ட்டை உள்ளே கொண்டு போங்க. நான் டாக்ஸியை அனுப்பிவிட்டு பின்னாடியே வர்றேன்னு அவன் சொன்னதை ஆர்டர்லீஸ் நம்பிட்டாங்க"

"அந்த ஆர்டர்லீஸ் இப்ப இருக்காங்களா ...? "

"இல்லை..... ஸார்....... அவங்களுக்கு ட்யூட்டி முடிஞ்சு கிளம்பிட்டாங்க. நாளைக்கு காலையில்தான் வருவாங்க......."

"நான் அவங்களைப் பார்க்கணும் "வேல்முருகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் யாரோ அழைப்பதற்கு அறிகுறியாய் வெளிச்சமாய் ஒளிர்ந்தது.

எடுத்துப் பார்த்தார். நித்திலன் பெயர் டிஸ்ப்ளேயில் தெரிந்தது. மெலிதான குரலில் பேசினார்.

"சொல்லுங்க நித்திலன்"

"ஸார் நீங்க இப்ப எங்கே இருக்கீங்க ...? "

"திரிசூலம் ஏரியாவில் "

"உடனே புறப்பட்டு வர முடியுமா ...? "

"ஏன் என்ன விஷயம் ...? "

"கஜபதி உயிரோடு இல்லை.... "

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

English summary
Rajesh Kumar's Five Star Droham serial episode 33
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X