Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 15

Subscribe to Oneindia Tamil

- ராஜேஷ்குமார்

கஜபதி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நித்திலன் சாதுர்யா பக்கம் தலையைச் சாய்த்து கிசுகிசுப்பான குரலில் சொன்னார்.

முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனோட டெட்பாடியை இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் எப்படியும் கண்டு பிடிச்சு கொலையாளி யாராய் இருக்கணும்கிற இன்வெஸ்டிகேஷனை ஆரம்பிச்சுடுவாங்க. நாம் டென்ஷன் படாமே இருக்கணும்….” போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் சாதாரணப்பட்ட ஆள் கிடையாது. அவருடைய விசாரணை முறைகள் வேகமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்….”

Five Star Dhrogam Chapter 15

கஜபதி பேசிக்கொண்டிருக்கும் போதே செந்தமிழ் மேடைக்குப் பக்கத்தில் இருந்து குரல் கொடுத்தாள்.

“கஜபதியண்ணே … என்ன அங்கே போய் உட்கார்ந்துட்டீங்க.. நம்ம மாப்பிள்ளையைக் காணோம்ன்னு எல்லாரும் தேடிகிட்டு இருக்கோம்…. ம்…. நீங்களும் வந்து தேடுங்க…

“இதோ…. வந்துட்டேன்….. தம்பி…..” கஜபதி எழுந்து வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு செந்தமிழை நோக்கிப் போனார். ஒரு ஆறுதலுக்குப் பேசினார்.

“மாப்பிள்ளை மணிமார்பன் எங்கே போயிடப் போறார் தம்பி …. ஏதாவது ஒரு பக்கம் விழா ஏற்பாடுகளை கவனிச்சுட்டு இருப்பார். தங்கச்சி கிட்ட கேட்டுப் பார்த்தீங்களா …..?

“ம் …… கேட்டுப் பார்த்தேன்… தங்கச்சி கயல்விழி கடந்த ஒருமணி நேரமாய் மாப்பிள்ளையைப் பார்க்கவே இல்லைன்னு சொல்றார் ….”

“சார். வாங்க தம்பி…. பார்த்துடுவோம்…..”

“ஒரு நல்ல காரியம் நடக்கற நேரத்துல இவர் வேற இப்படியொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிட்டு இருக்கார். தண்ணியைப் போட்டுகிட்டு எங்கேயாவது மட்டையாட்டம் விழுந்து கிடப்பார்ன்னு நினைக்கிறேன்…”

“சே.. சே..* என்ன தம்பி … நம்ப வீட்டு மாப்பிள்ளையைப் பத்திர அவ்வளவு மோசமாய் பேசறீங்க….இன்னிக்கு அப்பாவோட சஷ்டியப்த பூர்த்தி. எல்லா வி.ஐ.பீஸிம் வந்து போகிற நிகழ்ச்சி... அப்படி எல்லாம் அவர் தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்க மாட்டார்…..

“சார் சார் நிலவரம் என்னான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தொpஞ்சுடும்… வாங்கண்ணே மத்தவங்க தேடாத பக்கமாய் போய் தேடிப் பார்ப்போம்”

செந்தமிழும், கஜபதியும் பண்ணை வீட்டின் பின்புறத்தை நோக்கிப் போனார்கள்.

அறைக்குள் முகில்வண்ணன் பாறையாய் இறுகிப் போன முகத்தோடு உட்கார்ந்திருக்க, போலீஸ் கமிஷனர் ஆதிமூலம் தன் கையில் வைத்து இருந்த வாக்கிடாக்கியில் பதட்டமும் கவலையுமாய் அவர்க்கு முன்பாய் நின்றபடி பேசிக் கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வயர்லஸில் உடனுக்குடன் பதில் வந்தது.

Five Star Dhrogam Chapter 15

“என்னாச்சு ? ..

“ஸார் … நான் B ஸ்க்வாட்… சைலேஷ்… பண்ணை வீட்டோட ஈஸ்டர்ன் சைடு முழுவதும் பார்த்துட்டோம் ஸார்.. டூ நாட் நோ வேர் ஹி ஈஸ்?;…

“சரியாய் பார்த்தீங்களா ….”

“பர்பெக்ட் சர்ச் ஸார்… * அவர் சொல்லச் சொல்ல இன்னொரு குரல் கேட்டது.

“ஸார்… நான் A ஸ்க்வாட் அப்துல் ரஹீம். மணிமார்பன் ஸாரை கண்டுபிடிக்க முடியலை. பண்ணை வீட்டில் இருக்கிற எல்லா அறைகளையும் செக் பண்ணி பார்த்துட்டோம். இப்போ பண்ணை பங்களாவோட பவுண்டரிக்கு போயிட்டிருக்கோம். இங்கே கொஞ்சம் இருட்டாய் இருக்கு. இருந்தாலும் “ஜெய்ண்ட்

டார்ச்” வெளிச்சத்தோட உதவியால் எல்லா பகுதிகளையும் பார்க்க முடியும். எப்படியும் கண்டு பிடிச்சுடலாம் ஸார்”

“பேசிட்டு இருக்காதீங்க… ஐ வாண்ட் ரிசல்ட்” பேசிட்டு வாக்கிடாக்கியை அணைத்த கமிஷனர் ஆதிமூலம் முகில்வண்ணனிடம் பவ்யமாய் குனிந்தார்.

”ஸார்…”

முகில்வண்ணன் பெருமூச்சோடு நிமிர்ந்தார்.

“என்ன ….? என்பது போல பார்த்தார்.

“சி.எம். கிளம்பிப் போயிட்டார். ஒரு ரிலேட்டிவ்வோட கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணனுமாம்….”

“அவரோட பிரச்சினை அவர்க்கு…. நம்ப பிரச்சினை நமக்கு….” என்று சொன்னவர் கமிஷனரை கவலையோடு ஏறிட்டார்.

“நம்ம மாப்பிள்ளை மணிமார்பனைப் பற்றி உங்க கிட்ட போன்ல பேசின நபர் என்ன சொன்னான்னு மறுபடியும் ஒரு தடவை சொல்லுங்க. அவன் பேசின வார்த்தைகளை வெச்சு அவன் யார்னு கண்டுபிடிக்க முயற்சி பண்றேன்.”

கமிஷனர் சில விநாடிகள் யோசித்துவிட்டு சொன்னார்.

Five Star Dhrogam Chapter 15

“மணிமார்பனோட உடம்பு இந்த பண்ணை வீட்டுக்குள்ளேதான் இருக்கு. போய் தேடி கண்டிபிடிச்சு, முகில்வண்ணனோட சஷ்டியப்த பூர்த்தி சடங்குகளை நிறுத்திவிட்டு மணிமார்பனோட காரியங்களை பண்ண ஆரம்பிங்க. இந்த விஷயமாய் வேண்டியவங்க யார்க்கும் சொல்லி அனுப்ப வேண்டியதில்லை. ஏன்னா வேண்டியவங்க, சொந்தக்காரங்க எல்லாரும் இங்கேயே இருக்காங்க….”

“இவ்வளவு தைரியமாய் ஒருத்தன் போன் பண்ணி பேசறான்னா அவன் சாதாரண ஆளாய் இருக்க மாட்டான். இவ்வளவு கட்டுக்காவல்களையும் மீறி ஒருத்தன் இந்த பண்ணை பங்களாவுக்குள்ளே நுழைந்து என் மாப்பிள்ளை மேல கை வெச்சிருக்கான்னா அவன் நிச்சயமாய் என்னோட எதிரியாய் இருக்கமுடியாது. ஒரு நண்பனைப்போல்தான் உள்ளே நுழைஞ்சிருக்கணும்….”

“ஸார்… இது வெத்து மிரட்டலாய் கூட இருக்கலாம் “

“அப்படி வெத்து மிரட்டலாய் இருந்தா மாப்பிள்ளை மணிமார்பன் இப்ப நம்ம முன்னாடி நின்னுட்டு இருக்கணுமே…. *

“இன்னும் கொஞ்ச நேரத்துல உண்மை என்னான்னு தெளிஞ்சிடும் ஸார்….”

கமிஷனர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முகில்வண்ணன் மகள் கயல்விழியும் செந்தமிழின் மனைவி மலர்க்கொடியும் அழுகையோடு வந்தார்கள்.

Five Star Dhrogam Chapter 15

“அப்பா…” என்று கண்ணீரோடு விம்மியபடி முகில்வண்ணனை நெருங்கிய கயல்விழி அவருடைய காலடியில் போய் உட்கார்ந்தாள். அவர் அவளுடைய தலையை நடுக்கமாய் வருடிவிட்டார்.

“பயப்படாதேம்மா…. மாப்பிள்ளைக்கு ஒன்றும் ஆகியிருக்காது…. எனக்கு வேண்டாத யாரோ விளையாடறாங்க…. நீ தைரியமாய் இரும்மா” அவருடைய ஆறுதல் பேச்சில் நேரம் கரைய அரைமணி நேரத் தேடலுக்குப்பின் 'A’ ஸ்க்வாட் 'B’ ஸ்க்வாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கமிஷனர்க்கு முன்பாய் வியர்வை முகங்களோடு வந்து நின்றhர்கள்.

“என்ன ? ….

“பண்ணை பங்களாவிலும், பங்களாவைச் சுற்றி இருக்கிற பகுதிகளிலும் தேடிப் பார்த்துட்டோம் ஸார் மணிமார்பன் ஸார் எங்கேயும் இல்லை…”

“ஸோ… இது புரளிதான்”

“நோ .. டவுட் ஸார்…”

முகில்வண்ணக் கோபமாய் எழுந்து நின்றார். ஒட்டு மொத்த போலீஸையும் பார்த்து பெரிய குரலில் இறைந்தார்.

“அப்படீன்னா… என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் எங்கே…”

நித்திலனும், சாதுர்யாவும் இன்னும் அதே நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க கஜபதி சுற்றும்முற்றும் பார்த்தபடி அவர்களை நெருங்கி காலியாய் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். நடுக்கமான குரலில் கூப்பிட்டார்.

“நி…நி…நித்திலன்…*

“என்ன ஸார்…. மணிமார்பனோட டெட்பாடியை போலீஸ் பார்த்துட்டாங்களா ..?

“பாடி இருந்தாத்தானே பார்க்க முடியும்?…

“ என்ன ஸார்…. சொல்றீங்க?….

“பண்ணை பங்களாவுக்கு பின்னாடி இருக்கிற ஒரு குழியில்தானே மணிமார்பனை வெட்டுப்பட்ட காயங்களோடு உயிர்விட்டதைப் பார்த்தோம்….?

“ஆமா….”

“அந்த குழியில் பாடி இல்லை. எல்லா பக்கமும் தேடிப் பார்த்துட்டோம். எங்கேயும் இல்லை….. *

[அத்தியாயம் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41,42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51,52]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+