For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

-->மார்ச் 31, 2006

விருதாச்சலத்தில் விஜய்காந்த் போட்டி:
தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் விஜய்காந்த் போட்டியிடுகிறார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
பாமக வேட்பாளர் பட்டியலில் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று கோவிலிலிருந்து பிரச்சாரம் தொடங்கும் ஜெ
முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை சைதாப்பேட்டை கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்குகிறார்.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம்:
வில்லன் ஆனந்தராஜ் உள்ளே-சிவகாமி வெளியே

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 4 வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஜெவை எதிர்க்கும் வைரமுத்து உறவினர் சீமான்!
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் டுடோரியல் கல்லூரி அதிபரும், திரைப்பட வினியோகஸ்தரான சீமான் போட்டியிடுகிறார்.

மக்களை மயக்கும் திமுக-அதிமுக: விஜய்காந்த்
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழகங்களும் மக்களை மயக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் மாறி மாறி சலுகைகளை அறிவித்துள்ளன என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

திமுக-7 எம்எல்ஏக்களுக்கு "கல்தா-82 புதுமுகம்
கடந்த தேர்தலில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்எல்ஏகளுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வேட்பாளர்களில் 82 பேர் புதுமுகங்கள் ஆவர்

ஏகப்பட்ட புதுமுகங்களை களமிறக்கும் பாமக
31 இடங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியலில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தலித் அமைப்புகளுடன் கூட்டணி: பாஜக திட்டம்
ஏப்ரல் 4ம் தேதி பாஜகவின் மதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் அகிலஇந்தியச் செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

திமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு: ராமதாஸ்
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச டிவி, இலவச சமையல் கேஸ் அடுப்பு ஆகியவற்றை தருவது சாத்தியம் தான் எனறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கலர் டிவி வேணுமா?: திமுகவுக்கு ஓட்டு போடுங்க
திமுகவை ஒழித்து விடுவேன் என்று சொன்னவர்களை எல்லாம் கருணாநிதி கல்லரை கட்டியுள்ளார் என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசினார்.

பாளையம்கோட்டையில் திமுக வேட்பாளர்
தமிழ்மாநில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபாளையம்கோட்டை தொகுதியில் நெருக்கடிகள் காரணமாக மீண்டும் திமுகவே போட்டியிடுகிறது.

மார்ச் 30, 2006

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சேப்பாக்கத்தில் கருணாநிதி மீண்டும் போட்டி
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 129 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக்கின் தலைவர் கதிரவன் உசிலம்பட்டியிலும், புதிய பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அரக்கோணத்திலும் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கார்த்திக் கட்சியின் 2வது பட்டியல் வெளியீடு
கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பிரிவின் 30 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியலை வெளியிட்டுள்ளது.

மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு:
வைகோ போட்டியிடவில்லை

மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விசி வேட்பாளர் பட்டியல்-திருமா போட்டியில்லை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

ஜெனீவா செல்லும் குழுவுக்கு பாதுகாப்பு: புலிகள்
ஜெனீவாவில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கச் செல்லும் புலிகளின் பிரதிநிதிகளுக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரசுக்கும் நார்வேயிடமும் விடுதலைப் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு தமிழக கல்லூரிகளில்
இட ஒதுக்கீடு: மதிமுக தேர்தல் அறிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மீண்டும் கொண்டு வரப் பாடுபடுவோம், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சிப்போம் என மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொடாவில் கைதான 4 பேருக்கு "சீட்
பொடாவில் வைகோவுடன் சிறையில் இருந்த 4 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியிலிருந்து சேதுராமன் விலகல்!
திஞிஞ்க கூட்டணியில் தங்களது கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.

நாளை விஜய்காந்த் கட்சி வேட்பாளர் பட்டியல்!
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

ஜெ எதிர்ப்புக்கு பணிந்தது தேர்தல் ஆணையம்!
முதல்வர் ஜெயலலிதாவின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சுனாமி, மழை, வெள்ள நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம அறிவித்துள்ளது.

சந்தர்ப்பவாத கருணாநிதி: வைகோ பாய்ச்சல்
பதவிக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு, ஒவ்வொரு முறையும் ஒரு கட்சியுடன் சேரும் திமுகதான் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்: பிஆர்ஒ மாற்றம்
அதிமுக வேட்பாளர் பட்டியலை பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்த அரசு செய்தித் தொடர்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவிடைமருதூர்: திமுக-பாமக மோதல் தீவிரம்!
திமுகவினரின் போக்கைக் கண்டித்து தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பாமகவினர் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

பாப்பாவுக்கு எதிராக "முளைத்த போஸ்டர்கள்
திஞிஞ்க கூட்டணியில் தங்களது கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளது.

ஜெ. பிரசாரம் நாளை தொடக்கம்!
முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னை சைதாப்பேட்டையில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

அரசியலுக்கு முழுக்கு போடுகிறார் பொன்னையன்!
அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பொன்னையன், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாக கூறியுள்ளார்.

வைகோ வீட்டில் குவிந்தனர் நிர்வாகிகள்
சிவகாசி தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக கட்சி நிர்வாகிகளிடம் கூறியிருந்த வைகோ திடீரென போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததால் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முஸ்லீம் கட்சியை கலக்கிய எஸ்எம்எஸ்!
அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், படையெடுத்து வந்த எஸ்.எம்.எஸ். வதந்திகளால் கூட்டம் முழுவதும் பரபரப்பாக இருந்தது.

மார்ச் 29, 2006

திமுக தேர்தல் அறிக்கை: 2 ரூபாய்க்கு அரிசி
வீட்டுக்கொரு கேஸ் ஸ்டவ்- கலர் டிவி

திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநதி இன்று வெளியிட்டார்.

விஜய்காந்துடன் கரம் கோர்க்கிறார் கார்த்திக்!?
விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும், கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியும் கூட்டணி அமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.

திமுக சார்பில் மதுரையில் ஜெயலட்சுமி போட்டி?
திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதை வரும 31ம் தேதி தெரிவிப்பதாக ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

இன்று மதிமுக வேட்பாளர் பட்டியல்!
மதிமுக போட்டியிடும் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

ஆரிய மாயை: ஜெவுக்கு கருணாநிதி பதிலடி
பரம்பரை எதிரி குறித்து அண்ணா ஆரிய மாயை என்ற நூலில் விலாவாயாக குறிப்பிட்டுள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் போட்டி?
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

கார்த்திக் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல்
கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பிரிவு 15 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஜெயிக்க போவது.. -நம்பலாமா நாராயணனை?
ஜெயலலிதாதான் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருவார் என்று பிரபல ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் கூறியுள்ளார்.

2 நாட்களில் காங். வேட்பாளர் பட்டியல்!
இன்னும் இரண்டு நாட்களில் தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாராகி விடும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

ஏப். 2ல் பாமக வேட்பாளர் பட்டியல்?
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

காளிமுத்து, 4 அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்!
அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து உள்ளிட்ட 5 அதிமுக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக காளிமுத்து போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கூறியுள்ளது.

அதிமுக பட்டியல் வெளியிட்ட அரசு அதிகாரி
கிராமப் புறங்களில் உள்ள சுவர்களில், வீட்டு உரிமையாளர்களின் அனுமதியோடு சுவர் விளம்பரங்கள் செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

5,000 வாக்குச் சாடிகளில் மத்தியப் படைகள்!
தமிழகத்தில் பதட்டம் நிறைந்த 5,000 வாக்குச் சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினரை நிறுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதிமுகவுக்கு ஓட்டு.. கேப்டனின் டங் ஸ்லிப்!
விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகமும், கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியும் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

கார்த்திக்குக்கு கெட்-அவுட் சொன்ன ஜெ!
கூட்டணி தொடர்பாக கார்த்திக்கையும் பிஸ்வாஸையும் அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியபோது அங்கு சந்தானமும் திடீரென பிரசன்னமாகியுள்ளார். அத்துடன் கார்த்திக் தரப்பு கோபத்துடன் எழுந்து போயஸ் கார்டனை விட்டு வெளியில் வந்திருக்கிறது.

பழனி அதிமுக வேட்பாளர் திமுக உறுப்பினரா?
பழனி தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழரசி திமுக உறுப்பினராக இருந்தவர் என அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மார்ச் 28, 2006

திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் இது: ஜெ
அதிமுகவின் பரம்பரை எதிரியான திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இது. வரும் காலங்களில் தேர்தல் களத்தில் திமுகவை சந்திக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெவை திட்டாதீர்: கருணாநிதி அட்வைஸ்!
தேர்தல் பிரசார மேடைகளில் எந்தத் தலைவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தும், திட்டியும் பேசாமல் அதிமுக அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை அம்பலப்படுத்திப் பேச வேண்டும் என்று திமுக பேச்சாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை ரிலீஸ்
தமிழகம், புதுவை மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

பாமகவால் விரலை வெட்டிய திமுக தொண்டர்!
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்த திமுக தொண்டர் ஒருவர் தனது விரலை வெட்டி கட்சிக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

நினைச்சோம்..நடக்கலையே..திண்டிவனம் விரக்தி!
அதிமுக கூட்டணியில் எங்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை, அதற்கு என்ன செய்வது என்று திண்டிவனம் ராமமூர்த்தி விரக்தியாகக் கூறியுள்ளார்.

50 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி போட்டி!
தமிழக சமாஜ்வாடிக் கட்சி வருகிற சட்டசபைத் தேர்தலில் 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவரும், இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராம நவமியன்று பாஜக வேட்பாளர் பட்டியல்
ராம நவமி தினமான ஏப்ரல் 7ம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக் கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

புரட்சிப் புயலின் 35 நாள் சூறாவளி பிரசாரம்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக 35 நாள் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

88 எம்எல்ஏக்களுக்கு கல்தா கொடுத்த ஜெ:
21அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 21 அமைச்சர்கள், 52 எம்எல்ஏக்களுக்கு மட்டுமே மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 119 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது

பாண்டிச்சேரி விடுதலை சிறுத்தை வேட்பாளர்கள்
புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

உதயசூரியனில் மொஹைதீன் வென்றது செல்லும்
நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஊட்டி வளர்த்தேன் அன்பு தங்கச்சி..
தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சி!

சட்டசபைத் தேர்தலில் எப்படிப் போட்டியிடுவது என்பது குறித்து ஏப்ரல் 2ம் தேதி கூடும் கட்சியின் அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

புதிய தமிழகம்: 27 வேட்பாளர்கள் அறிவிப்பு
புதிய தமிழகம் கட்சியின் முதல் வேடபாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்ஐ!
புதுவை சட்டசபைத் தேர்தலில் ஊசுடு (தனி) தொகுதியில், அதிமுக சார்பில், அம் மாநில உதவி சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் போட்டியிடுகிறார்.

தேர்தலை புறக்கணிக்கும் "சுனாமி விவசாயிகள்!
கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் நிவாரணம் கிடைக்காமல் அவதிப்படும் விவசாய குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

சென்னையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன், மற்றும் ஆணையர்கள் நவீன் சாவ்லா, கோபால்சாமி ஆகியோர் இன்று சென்னையில் அதிகாரிகள் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

தேர்தல் டிக்கெட் கேட்ட பெண் போலீஸ் சீட்
கிழிப்பு!

சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்த பெண் காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

திமுகவுக்கு சிறுபான்மை அமைப்பு ஆதரவு
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சிறுபான்மையினர் கூட்டமைப்பு நிர்வாகிகள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மார்ச் 27, 2006

அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு:
ஆண்டிப்பட்டியில் ஜெ. மீண்டும் போட்டி

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

பொன்னையன், இன்பத்தமிழனுக்கு சீட் இல்லை:
தப்பினார் வளர்மதி!

அமைச்சர்கள் பொன்னையன், இன்பத் தமிழன், அண்ணாவி, ராமச்சந்திரன், துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா இந்த முறை சீட் தரவில்லை.

திண்டிவனம், டிஆருக்கு பட்டை-செந்திலுக்கு ஆப்பு
அதிமுகவில் சீட் கிடைக்கும் என கடைசி வரை நம்பிக்கையோடு காத்திருந்த திண்டிவனம் ராமமூர்த்தி, விஜய டி.ராஜேந்திரருக்கு ஆகியோருக்கு முதல்வர் ஜெயலலிதா பட்டை நாமம் சாத்தியுள்ளார்.

25 பெண்களுக்கு சீட்: 20 பேர் புதுமுகங்கள்!
முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் 25 பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

சந்தானத்துக்கு மதுரைக்கு பதில் சோழவந்தான்!
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் சந்தானம் மதுரை மத்திய தொகுதிக்குப் பதிலாக சோழவந்தான் தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

பாண்டிச்சேரி அதிமுக வேட்பாளர்கள் விவரம்
பாண்டிச்சேரி அதிமுக வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது.

கேரளத்தில் அதிமுக போட்டி-வேட்பாளர் பட்டியல்
கேரளத்திலும் 54 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

ரஜினியை வளைக்க அதிமுக சக்கர வியூகம்!
கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் நேரடியாக தலையிட்டு அதிமுக ஆதரவு ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசியதால், கொடியை அறிமுகம் செய்வதை மட்டும் ரசிகர்கள் நிறுத்தி விட்டனர்.

சென்னை ரஜினி ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவு!
திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாங்கள் செயல்படுவோம் என தென் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் அறிவித்துள்ளது.

புதியவர்களுக்கே அதிக வாய்ப்பு: கருணாநிதி
திமுகவின் வேட்பாளர் தேர்வில் புதியவர்களுக்கும், பெண்களுக்கும் அதிக வாய்ப்பளிக்கப்படும் என கருணாநிதி கூறியுள்ளார்.

29ம் தேதி கார்த்திக் கட்சி வேட்பாளர் பட்டியல்
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 29ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் கார்த்திக் அறிவித்துள்ளார்.

முகையூர் திமுக எம்எல்ஏ சுயேச்சையாக போட்டி!
முகையூர் தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்துள்ள தற்போதைய திமுக எம்.எல்.ஏவான ஏ.ஜி.சம்பத் பாமக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஜெ. நடத்தியது சங் பரிவார் ஆட்சி: தமுமுக
திமுக தலைமையிலான கூட்டணிக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் ஆதரிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

பொது தொகுதியிலும் தலித் வேட்பாளர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதுத் தொகுதிகளிலும் சில தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

நெருக்கும் கழகங்கள்; திணறும் நரேஷ்குப்தா!
திமக மற்றும் அதிமுகவின் தொடர் நெருக்குதல் காரணமாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா விழி பிதுங்கிக் காணப்படுகிறார்.

...மேலும்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X