• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக 41% அதிமுக 36%: புதிய கருத்துக் கணிப்பு

By Staff
|

தமிழகத்தில் ஊழல், சர்வாதிகார ஆட்சி-சோனியா

தமிழகத்தில் நிலவும் ஊழல், சர்வாதிகார ஆட்சியைப் போல புதுவையிலும் அமைந்து விடாமல் புதுவை மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

ப.சி தரும் புள்ளி விவர டென்சன்-ஜெ. பாய்ச்சல்

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் மத்திய அரசால் அளிக்கப்பட்ட உதவிகள் குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டு வருவாத முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

காலுக்கு செருப்பாக இருப்பேன்: கருணாநிதி

மீண்டும் என்னைத் தேர்ந்தெடுத்தால் மக்களின் காலுக்கு செருப்பாக இருந்து செயல்படுவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிமுகவில் எஸ்.எஸ்.ஆர்- விசுவும் சேருகிறார்!

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திமுக 41% அதிமுக 36%: புதிய கருத்துக் கணிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து குட்வில் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி-மனு தாக்கல் செய்ய சென்ற

எம்ஜிஆர் அண்ணன் மகளை கடத்திய அதிமுக

ஆண்டிப்பட்டி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதியை அதிமுகவைச் சேர்ந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

கலர் டிவிக்கு யாரு கரண்டு பில் கட்றது?-வைகோ

கையில் காசில்லாவிட்டாலும் ரேசன் அட்டை இருந்தால் போதும் 10 கிலோ அரிசி வாங்கி உலையில் போடாலாம் என்ற ஏழைகளுக்கான திட்டத்தை புண்ணியவதி ஜெயலலிதா அறிவித்துள்ளார் என வைகோ கூறினார்.

சசிகலா பற்றி வைகோ பேசுவாரா?: பாஜக

திமுகவில் வாரிசு அரசியல் பற்றிப் பேசும் வைகோ அதிமுகவில் நடக்கும் சசிகலா குடும்ப அரசியல் குறித்துப் பேசுவாரா என்று பாஜக அகில இந்தியத் துணைத் தலைவர் இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமா-மணி, முத்துலட்சுமி சீப்பு, டிஆர்-ரயில்

தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 9 வேட்பாளர்களுக்கும் கோவில் மணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் ரிலீஸ்!

அதிமுகவினரிடமிருந்து காப்பாற்ற மதுரை கல்யாண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்கள் விடுவிக்கப்பட்டு அவரவர் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தேர்தல் களத்தில் 2,586 வேட்பாளர்கள்:

ஆண்டிப்பட்டி-16, சேப்பாக்கம் 20

தமிழக சட்டசபைத் தேர்தலில் 2,586 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.

சித்தியும், சித்தப்பா சரத்குமாரும்!

நெல்லை மாவட்ட தொகுதிகளில் அதிமுகவுக்காக வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார், தனது மனைவி ராதிகாவை உங்கள் சித்தி என்று கூறி பிரசாரம் செய்தார்.

விலகாதீர்-வேட்பாளர்களுக்கு கேப்டன் கோரிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளர்கள், யாருடைய நிர்ப்பந்தத்திற்காகவும் போட்டியிலிருந்து விலகக் கூடாது என்று கட்சித் தலைவர் நடிகர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி-மத்திய அரசு தலையிட திமுக கோரிக்கை

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக வெளியிடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மாநகராட்சி தோறும் ஐடி பூங்காக்கள்-தயாநிதி

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாநாகராட்சிகள் தோறும் இன்பர்மேசன் டெக்னாலஜி பார்க்குகளை ஏற்படுத்தி லட்சக்கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் காட்டுவோம் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஜெ, கருணாநிதி, விஜயகாந்த் தொகுதிகளின்

வேட்பாளர்கள் விவரம்

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல்:

கலர் டிவி-தா.பாண்டியன் சேம் சைட் கோல்!

கலர் டிவி திட்டம் தரும் திட்டத்தைத் தடுக்க முடியாது. அதேசமயம், கலர் டிவி இப்போது அவசியமற்ற ஒன்று என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் விதிமீறல்: அதிமுக புகார்

அறந்தாங்கி தொகுதி திமுக வேட்பாளர் அப்பட்டமான விதி மீறலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை தேர்தலில் போட்டியிட தடை செய்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் அதிமுக சார்பில் புகார் கொடுத்துள்ளது.

சிம்ரனின் பனானா பிரசாரம்!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் தாவூத் மியாகானை ஆதரித்து அவரது சின்னமான வாழைப் பழத்துடன் நடிகை சிம்ரன் பிரசாரம் செய்தார்.

ஏப்ரல்24, 2006

25 பா.பி வேட்பாளர்கள் மாயம்:

கார்த்திக் குடும்பத்துக்கும் மிரட்டல்

கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 25 வேட்பாளர்களைக் காணவில்லை. அவர்களில் சிலரை ஆளும் தரப்பினரும் போலீசாரும் தூக்கிக் கொண்டு போய்விட்டதாகவும் மேலும் பலரை போலீஸ் உதவியுடன் வீட்டிலேயே சிறை வைத்திருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

200 தொகுதிகளில் வெல்வோம்: கருணாநிதி

சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

32 லட்சம் பேருக்கு வேலை: ஜெ. மீண்டும் உறுதி

அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 32 லட்சம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

விஜய்காந்த் கட்சிக்கு முரசு, மோதிரம்!!

தே.மு.தி.க கொடிகள், பேனர்களை போலீஸார் தேவையில்லாமல் அகற்றி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு மறியல் செய்தார் நடிகர் விஜயகாந்த்.

வைகோவின் நூல்களை எரிக்க வேண்டும்: சுப.வீ

சிறையில் இருக்கும்போது வைகோ எழுதிய நூல்களை எரிக்க வேண்டும் என்று தமிழறிஞர் சுப.வீரபாண்டியன் கூறினார்.

சாதி கலவரத்தை ஏற்படுத்த திமுக சதி: வைகோ

தேவர் சமுதாயத்தினருக்கும், தலித் மக்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி, சாதிக் கலவரத்தை உண்டுபண்ண திமுக தலைவர் கருணாநிதி சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை, சென்னையில் சோனியா நாளை பிரசாரம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

ஜெவுக்கு வாக்களித்தால் பாவம்-காஞ்சி பக்தர்கள்

ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் அது பாவம் என காஞ்சி சங்கரர் பக்தர்கள் பேரவை கூறியுள்ளது.

திமுகவில் எனக்கு வேலையே தரவில்லை-சரத்குமார்

திமுகவில் யாருக்குமே என்னைப் பிடிக்கவில்லை. அப்படி இருக்கையில் என்னால் எப்படி அங்கு நீடிக்க முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவில் இணைந்த 3 தேமுதிக வேட்பாளர்கள்!

விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், கட்சியின் 3 வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல்

வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

பிரமோத் மகாஜனுக்கு சென்னையில் பாஜக யாகம்

தம்பியால் சுடப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ள பாஜக மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் விரைவில் நலம் பெற வேண்டி சென்னையில் பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

காவிரி: உச்சநீதிமன்றத்தை அணுகும் தமிழகம்

காவிரி நடுவர் மன்றத்தின் புதிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நான் கம்ப்யூட்டர் தர்றேன்: மூமுக உதார்!

என்னை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுங்கள், வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் இலவசமாக தருகிறேன் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக வேட்பாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

திமுகவின் கலர் டிவி விண்ணப்பம்: பாஜக புகார்

கலர் டிவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பொது மக்களிடம் வினியோகித்த திமுகவினர் குறித்து பாஜக வேட்பாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து திமுகவினரை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

முத்துலட்சுமி சபதம்: மிரட்சியில் திமுக

பெண்ணாகரம் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

டி.ராஜேந்தருக்கு ஆதரவாக சிம்பு பிரசாரம்!

இயக்குனர் விஜய டி.ராஜேந்தருக்கு ஆதரவாக அவரது மகனும், நடிகருமான சிம்பு மயிலாடுதுறை தொகுதியில் நான்கு நாள் பிரசாரம் செய்யவுள்ளார்.

கிரைண்டர் குடுப்பீங்களா?: ராமராஜன் நக்கல்

கலர் டிவி கொடுப்பது போல வாஷிங் மெஷின், கிரைண்டர், தையல் மிஷன் என வீட்டில் என்ன பொருள் இல்லையோ அதை இலவசமாக கொடுக்கலாமே என்று என்று நடிகர் ராமராஜன் கருணாநிதிக்கு யோசனை கூறியுள்ளார்.

ஏப்ரல்23, 2006

சொன்னத செய்வோம்-மதுரையில் கருணாநிதி உறுதி

ஊட்டி கட்டமைப்பை மேம்படுத்துவேன்: ஜெ.

நாங்க ரெடி.. நீங்க ரெடியா?-வைகோ சவால்

ஆண்டிப்பட்டி பா.பி வேட்பாளரை வளைத்தது

அதிமுக: போட்டியிலிருந்து திடீர் வாபஸ்
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த பார்வர்ட் பிளாக் வேட்பாளர் பொன்.முருகனை அவரை அதிமுக பேசி வளைத்துவிட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் புதிய முடிவு:

தமிழகம் அதிர்ச்சி


காவிரிப் பாசனப் பகுதியில் ஆண்டுக்கு எத்தனை முறை பயிர் சாகுபடி நடைபெறுகிறது என்பது குறித்தும், அதற்குத் தேவையான தண்ணீரின் அளவு குறித்தும் கணக்கெடுப்பு நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்தியஅரசுக்கு காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுயேச்சையான ஆண்டிப்பட்டி தேமுதிக வேட்பாளர்

உயிருக்குப் போராடும் பிரமோத் மகாஜன்

கருணாநிதிதான் பணக்கார வேட்பாளர்

என் சோகக் கதையை கேளு தாய்க்குலமே..

இமையில் இலையை குத்தி பிரச்சாரம்

திமுகவுக்காக நாளை முதல் டி.ஆர் பிரசாரம்

தேர்தல் எதிர்ப்பு பிரசாரம்: ஒருவர் கைது

ஏப்ரல்22, 2006

உத்தரப் பிரதேசத்தில் சு.சுவாமிக்கு அடி, உதை

ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஆட்சேப மனுவைக் கொடுக்கச் சென்றபோது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களால், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டார்.

பிரமோத் மகாஜன் மீது சகோதரர் துப்பாக்கிச் சூடு

பாஜக பொதுச் செயலாளரான பிரமோத் மகாஜனை அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலில் 3 குண்டுகள் காய்ந்து பலத்த காயமடைந்த பிரமோத் மும்பை இந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழன் மானத்தைக் காப்பது திமுக: கருணாநிதி

தமிழனின் தன்மானத்தைக் காப்பது திமுக மட்டுமே. மக்கள் பிரச்சினைகளுக்குப் போராட்டம் நடத்தி தீர்வு காண்பதும் நாங்கள்தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேட்பாளர் சாவு-கார்த்திக் மீது செயலாளர் பழி

திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் சாவுக்கு நடிகர் கார்த்திக்தான் காரணம் என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளரும் தீவிர அதிமுக ஆதரவாளருமான தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

விஜயகாந்த் எல்லாம் ஒரு ஆளா? நெப்போலியன்

திண்டுக்கலில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணைப் பார்த்து, விஜயகாந்த் எல்லாம் ஒரு ஆளா என்று நடிகர் நெப்போலியன் கோபமாக கேட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

2 வட மாநில கொள்ளையருக்கு தூக்கு தண்டனை

வேலூர் மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த டாக்டர் மற்றும் தொழிலதிபரின் மனைவி ஆகியோரைக் கொன்று கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 கொள்ளையர்களுக்கு ராணிப்பேட்டை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

போட்டியிலிருந்து விலக முத்துலட்சுமி மறுப்பு

பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலக மாட்டேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

புதுவை: இரட்டை இலையில் சிறுத்தைகள் போட்டி

பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் இருவரும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார்கள் என அதிமுக அறிவித்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்

நாகர்கோவில் தொகுதியில் மதிமுக வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிடும் தற்போதைய தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தயாநிதியை தடுத்து மண்டை காய்ந்த போலீஸ்

முதல்வர் ஜெயலலிதா வரும் பாதையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அங்கு கூடியிருந்தவர்களிடம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரசாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளத்தில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு

கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

தமிழர்கள் பிச்சைக்காரர்களா?: பாஜக

இலவச அறிவிப்புகள் மூலம் தமிழர்களை பிச்சைக்காரர்கள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டார் கருணாநிதி என அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.

ஏப்ரல்21, 2006

முத்துலட்சுமி விலக வேண்டும்: ராமதாஸ்

ஜெயலலிதா மாறவே இல்லை. அவர் மாறிவிட்டதாக சில பத்திரிக்கைகள் தான் எழுதுகின்றன. அவர் மாறக் கூடிய சுபாவம் கொண்டவரே அல்ல என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திமுக கூட்டணி 44.5 %-அதிமுக கூட்டணி 40.1 % லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 44.5 சதவீதத்தினரும், அதிமுக கூட்டணிக்கு 40.1 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய லேட்டஸ்ட் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கேரளத்தில் நாளை முதல்கட்ட வாக்குப் பதிவு

கேரள மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்கிறது.

அரசு குழந்தைகள் மருத்துவனை டாக்டர்கள் ஸ்டிரைக்

சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்து 12 நாளே ஆன குழந்தை இறந்ததையடுத்து 2 டாக்டர்களை குழந்தையின் உறவினர்கள் தாக்கினர். இதையடுத்து டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

32 லட்சம் வேலை வாய்ப்புகள்: ஜெ. உறுதி

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 32 லட்சம் இளைஞர்களுக்கும் மகளிருக்கும் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தூத்துக்குடி: பிரமாண்ட கூட்டம்-திமுக அப்பாடா

தேர்தல் வரும்போது வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், தேர்தல் முடிந்த பிறகு அவற்றை மறந்து விடுவதும் அதிமுகவின் வாடிக்கையாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

அ.விஜயகாந்த் - க.விஜயகாந்த் - ச.விஜயகாந்த்:

பாமக வைத்த பாம்: அதிர்ச்சியில் தேமுதிக!

நடிகர் விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் என்ற பெயரில் மேலும் 3 பேர் போட்டியிடுவதால் தேமுதிகவினர் கலங்கிப் போயுள்ளனர்.

புண்ணியவதி ஆட்சி நீடிக்க வேண்டும்: வைகோ

பட்டினிச் சாவுகளைத் தடுத்து விவசாயிகளைக் காத்த இந்த புண்ணியவதியின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கமலிடம் ரூ. 100 கோடி பேரம்: ஆளும் தரப்பு

நெருக்குதல்- அமெரிக்கா சென்றார் கமல்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு நடிகர் கமல்ஹாசனிடம் ரூ. 100 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

அதிமுக மிரட்டல்-தூக்கு போட்ட பார்வர்ட் பிளாக்

வேட்பாளர் மரணம்-கடத்தப்பட்டாரா கார்த்திக்?

அதிமுகவினரின் மிரட்டலால் விஷம் குடித்தும் பின்னர் தூக்கும் மாட்டிக் கொண்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பார்வர்ட் பிளாக் வேட்பாளர் செந்தில் மரணமடைந்தார்.

கடைசி நேரம் வரை நடராஜை காக்க முயற்சி!

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவிக்கு கடைசி நேரத்தில் 3 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான லத்திகா சரணை தேர்தல் ஆணையமே முடிவு செய்து ஆணையராக நியமித்துள்ளது.

தயாநிதி மீது சரத்குமார் சரமாரி தாக்கு

கடந்த 8 ஆண்டு காலமாக திமக என்ற சிறையில் சிக்கித் தவித்த நான் இன்று விடுதலை பெற்றுள்ளேன் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

4,218 வேட்பு மனுக்கள் தாக்கல்-இன்று பரிசீலனை

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 4,218 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

27ம் தேதி சோனியா வருகை-2 நாள் பிரசாரம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் அவர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல்20, 2006

ரூ. 100 கோடிக்கு பிரபல நடிகரிடம் பேரம்

பேசிய அதிமுக: கருணாநிதி பரபரப்பு தகவல்!

பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும் திமுக தலைவர் கருணாநிதி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷ்னராக லத்திகா சரண்:

தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பெண் அதிகாரியான லத்திகா சரணை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாறன் சகோதரர்களிடம் 10000 கோடி-சுவாமி

சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பியும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் ரூ. 10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருவரும் பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் முடிந்தது

தமிழகம் மற்றும் புதுவையில் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

கார்த்திக் எங்கே? செல்போன் சுவிட்ச் ஆஃப்

சசிகலாவின் கணவர் நடராஜன், மதுரை சாமியார், இயக்குனர் இமயம் ஆகியோர் மூலம் சொல்லியும், உளவுத்துறையை விட்டு மிரட்டியும், அடாவடி சினிமா பைனான்சியர் ஒருவரை விட்டு அதட்டி, உருட்டியும் அதிமுகவுக்குக் கட்டுப்பட மறுத்துவிட்ட நடிகர் கார்த்திக்கை இன்று நிருபர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

போலீஸை அடக்க ஆணையத்துக்கு திமுக கடிதம்

திமுக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரசார திரைப்படத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதில் தலையிட்டு உரிய தீர்வு காண தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால் ஆணையத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்தப்படும் என திமுக எச்சரித்துள்ளது.

கேப்டனை கடுப்படித்த பொது ஜனம்!

15 கிலோ ரேஷன் அரிசியை இலவசமாக வழங்குவேன் என்று நடிகர் விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது, அதெல்லாம் சும்மா என்று ஒருவர் குரல் கொடுத்ததால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த வேட்பாளரின் சொத்து 94 ரூவா 15 காசு

திருச்செங்கோடு சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தேன்மொழி என்ற சுயேச்சை வேட்பாளர் தனக்கு சொந்தமாக 94 ரூபாய் 15 காசுகள் மட்டுமே உள்ளதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

சரத்துக்கு அதிமுக அனுப்பிய ஸ்பெஷல் பிளைட்!

சரத்குமாரையும் ராதிகாவையும் அதிமுகவுக்குக் கொண்டு வருவதில் நடராஜன் மட்டுமின்றி அவரது தம்பி உள்ளிட்டோரும் பெரும் முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.

நிபந்தனையில்லாமல் 10 கிலோ அரிசி: ஜெ.

மொடக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி நீக்கப்பட்டு வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெவின் அரிசி ரகசியம்: ராமதாஸ் சஸ்பென்ஸ்

ஜெயலலிதாவின் இலவச அரிசி அறிவிப்பு குறித்து இன்று மாலை சைதாப்பேட்டை பொதுக் கூட்டத்தில் ரகசிய தகவல் ஒன்றை வெளியிடுவேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

ஜெயாவின் கையில் அட்சய பாத்திரம்: வைகோ

அதிமுக கூட்டணிக்கு அபரிமிதமான வெற்றியைக் கொடுத்து, மாநில மக்களை வஞ்சித்து வரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று வேலூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார் வைகோ.

நிபந்தனையில்லாமல் 10 கிலோ அரிசி:

ஓசி குறித்து ஜெ விளக்கம்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி ற்றிலும் இலவசமாக வழங்கப்படும். 20 கிலோ அரிசி வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று நிபந்தனை ஏதும் இல்லை. கண்டிப்பாக பத்து கிலோ அரிசி இலவசமாகவே வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்டாலினுக்கு எதிராக இன்று சரத்குமார் பிரசாரம்

அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் சரத்குமார் இன்று சென்னையில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.

...மேலும்

Mail this to a friend  Post your feedback  Print this page வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X