11ல் போட்டி; 223ல் திமுகவுக்கு ஆதரவு-டிஆர்
ஜெவுக்கு எதிராக பா.பிளாக் வேட்பாளர் போட்டி:
மாற்று வேட்பாளராக கார்த்திக்
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்ட பார்வர்ட் பிளாக் செயலாளர் பொன்.முருகன் போட்டியிடுவார். அவர் நாளை மனு தாக்கல் செய்வார். அவருக்கு மாற்று வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். நானும் வேட்பு மனு தாக்கல் செய்வேன் என்று பார்வர்ட் பிளாக் தலைவரும் நடிகருமான கார்த்திக் கூறியுள்ளார்.
ராதிகா நிறுவனத்தை விலை பேசும் ரிலையன்ஸ்!
சரத்குமாருடன் ராதிகாவும் அதிமுகவில் சேர்ந்துவிட்டதால் சன் டிவியில் அவர் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் தொடருமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.
10 கிலோ அரிசி இலவசம்-அம்மா அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி வாங்கும் போது, அதில் 10கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா திடீரென அறிவித்துள்ளார்.
ஜெ அறிவிப்பால் திமுக கலக்கம்-வைகே
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 10 கிலோ இலவச அரிசி என்ற அறிவிப்பால் திமுக கூட்டணி பெரும் கலக்கமடைந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அரிசி: வைகோவுக்கு ஜெ மூக்கறுப்பு-கருணாநிதி
கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்த திமுகவை விமர்சித்து வரும் வைகோவுக்கு, 10 கிலோ அரிசி இலவசம் என்று கூறி ஜெயலலிதா சரியான மூக்கறுப்பு செய்துள்ளார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தியாகி திண்டிவனத்துக்கு தியாகத்தின் சின்னம்?
தனது கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என தமிழக ஜனநாயக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
திமுக வேட்பாளரை இறக்கிவிட்ட குதிரை!
நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் மலைராஜா குதிரை மீது ஏறி வாக்கு சேகரிக்கச் சென்றார். ஆனால் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் குதிரை நகர மறுத்ததால் அதிலிருந்து இறங்கி நடந்தே சென்று ஓட்டு கேட்டார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை (டியர்னஸ் அலவன்ஸ்-டி.ஏ) தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
மகா குழப்பத்தில் பாஜகவின் மெகா கூட்டணி!
ஐக்கிய ஜனதா தளத்தின் தமிழ் மாநிலப் பிரிவின் தலைவர் பதவியில் இருந்த ராஜசேகரன் அப்பதவியிலிருந்து விலகி விட்டதாலும், கூட்டணியிலிருந்து அக்கட்சி விலகி விட்டதாலும் அக்கட்சிக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளை என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
சொத்து: ஜெவை மிஞ்சினார் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி தனது சொத்து விவரப் பட்டியலை தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு சொந்தமாக வீடு, கார், நிலம் என எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கோவணத்துடன் வந்த வேட்பாளர் கைது!
மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் ஏறி, கோவணம் அணிந்தபடி வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
11ல் போட்டி; 223ல் திமுகவுக்கு ஆதரவு-டிஆர்
11 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மீதமுள்ள 223 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக இயக்குனர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ஜெவுக்கு மன்னிப்பே இல்லை -அன்புமணி
தெருவுக்குத் தெரு சாராயக் கடைகளைத் திறந்த ஜெயலலிதாவை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
ஜெவின் தோல்வி பய அரிசி: கிருஷ்ணசாமி
தோல்வி பயம் காரணமாகவே 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுவரை 1,168 பேர் வேட்பு மனு தாக்கல்
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 1,168 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனோ உள்ளே- களமிறங்கும் கராத்தே
சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த வட சென்னை காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அமெரிக்க நாராயணனுக்கு தீரர் மகள் ஆதரவு
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மைலாப்பூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் அமெரிக்க நாராயணனுக்கு ஆதரவாக தீரர் சத்தியமூர்த்தியின் மகள் பிரசாரம் செய்யவுள்ளார்.
ஏப்ரல்17, 2006
ஜெவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் சரத்:
ராதிகா-சரத்துக்கு கருணாநிதி வாழ்த்து
திமுகவிலிருந்து விலகியுள்ள நடிகர் சரத்குமார் இன்று முதல்வர் ஜெயலலிதாவை தேனியில் வைத்து சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவருடன் ராதிகாவும் அதிமுகவில் இணைந்தார்.
கருணாநிதி, விஜய்காந்த் வேட்பு மனு தாக்கல்
திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முசிறியிலும் ஜெயலலிதா போட்டி?
ஆண்டிப்பட்டி தவிர முசிறியிலும் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
பெண்ணாகரத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல்
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரபலங்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பாஜக-ஜனதா கட்சி கூட்டணிக்கு விஎச்பி ஆதரவு
வரும் தேர்தலில் பாஜக-ஜனதா கட்சி கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை அறிவித்துள்ளன.
நான் யாரு??.. பாட்டிகளிடம் ஜெ கலகல
ஆண்டிப்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, இரண்டு பாட்டிகளைப் பார்த்தவுடன் அவர்கள் பக்கத்தில் வேனை நிறுத்தி அன்புடன் நலம் விசாரித்து அசத்தினார்.
தேர்தலில் போட்டியிடும் அல்-உம்மா தீவிரவாதி
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அல்-உம்மா தீவிரவாதிக்கு பட்டுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திமுகவுக்கு உதவ டிஆருக்கு கருணாநிதி கோரிக்கை
எனது முதல் சுற்றுப் பிரசாரத்தின்போது மக்களிடம் ஐந்து மடங்கு அதிக எழுச்சியைக் கண்டேன். இந்த சுற்றுப்பயணம் பிரமாண்ட வெற்றியாக அமைந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அமைச்சருக்கு கும்மாங் குத்து-வேட்டி உருவல்
கோவை மாவட்டம் பொங்கலூர் அருகே நடந்த அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் தாமோதரனுக்கு அடி, உதை விழுந்தது. அவரது வேட்டி-சட்டை கிழிக்கப்பட்டது. சேர்கள் வீசப்பட்டதால் போலீசார் உதவியுடன் உயிர் தப்பி ஓடினார் அமைச்சர்.
ஈஸ்டர்-சர்ச்சுகளை முற்றுகையிட்ட கரைவேட்டிகள்!
இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் அரசியல்வாதிகள் முற்றுகையிட்டு ஓட்டு வேட்டையாடினர்.
பசி,அன்புமணி,கலாநிதி மீது சுவாமி பரபர புகார்
மத்திய நிதி அமைச்சர்கள் ப.சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், தயாநிதி மாறன் மற்றும் சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்ன் சுவாமி பரபரப்பு புகார்களை வீசியுள்ளார்.
கடுமையான போட்டி, தெளிவான முடிவு: ப.சி
சட்டசபைத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் முடிவு தெளிவாக இருக்கும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மதுரையில் கேப்டன் மீது கல் வீசிய குடிமகன்!
நடிகர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த வாலிபர் அவர் மீது கல் எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 நாளில் கருணாநிதி முதல்வர்: தயாநிதி
நள்ளிரவில் வீடு புகுந்து கருணாநிதியை தரதரவென இழுத்துச் சென்றதை மக்கள் மறக்காமல் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறினார்.
அதிமுகவுக்கு படுதோல்வி நிச்சயம்: நல்லகண்ணு
தமிழக நதிகளை இணைப்போம் என்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை அறிவித்துள்ள ஜெயலலிதா இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படுவது நிச்சயம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
கருணாநிதிக்கு சமூக அக்கறை இல்லை: திருமா
சமூக அக்கறையே இல்லாமல் கலர் டிவி தருவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்டுகள் வேஸ்ட்: ராதாரவி சொல்கிறார்
இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்களைக் காக்கவே மீண்டும் முதல்வர் பதவியில் அமர துடிக்கிறார் கருணாநிதி என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
ஒசூர், தளி பகுதிகளில் அத்வானி பிரசாரம்
பாஜக முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானி வரும் 24ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
ஏப்ரல்16, 2006
நாளை கருணாநிதி- மதிமுகவினர் வேட்பு மனு
திமுக தலைவர் கருணாநிதி தனது முதல் கட்ட வட மாவட்ட பிரசாரத்தை முடித்துக் கொண்டு இன்று முதல் 2 ாட்கள் தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
பிரச்சாரம்: சிம்ரனுக்கு ரூ.25,000-விந்தியாவுக்கு ரூ. 20,000
அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க நடிகை சிம்ரனுக்கு ஒரு கூட்டத்துக்கு ரூ. 25,000மும் விந்தியாவுக்கு ரூ. 20,000மும் தரப்படுவதாகத் தெரிகிறது.
கரடி (கதை) விட்ட பாக்கியராஜ்!
தேர்தல் பிரசாரத்தின்போது தனது பாணியில் கதை சொல்லி இயக்குனர் பாக்கியராஜ் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
நரேஷ்குப்தா-மத்தளத்துக்கு இரு பக்கமும் அடி
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெ-சசி கொள்ளையை தடுத்தாலே போதும்..
எல்லாம் தர முடியும்: -ஸ்டாலின்
ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சமூகத்தின் அத்தனை தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தரிசு நிலம்: கருணாநிதி-ஜெ போர் தொடர்கிறது
நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை அறிவித்து மக்களை திசை திருப்பி வருகிறார் கருணாநிதி என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நடராஜை மாற்ற தேர்தல் ஆணையம் மீண்டும்
உத்தரவு
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்யும்படி தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
டி.ஆர். கட்சியின் வேட்பாளர் பட்டியல்
இயக்குனர் விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கேரள பிரசாரத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா தனது கேரள மாநிலப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்து விட்டார்.
காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் கராத்தே
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்து ரூ. 24.65 கோடி!
முதல்வர் ஜெயலலிதா தன்னிடம் ரூ. 24.65 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
ப.சிதம்பரத்துக்கு வைகோ கிடுக்கிப் பிடி
2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை தமிழகத்தில் வழங்குவதைப் போல இந்தியா முழுவதும் வழங்க மத்திய நிநதியமைச்சர் ப.சிதம்பரம் தயாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
ஏப்ரல்15, 2006
//
வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும்க முதல்வர் ஜெயலலிதா இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மயிலாடுதுறையில் டி.ராஜேந்தர் போட்டி
இயக்குனர் விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஜேந்தர் தனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.
2 தொகுதி காங். வேட்பாளர்கள் மாற்றம்
தொட்டியம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
நான் தனி ஆள் இல்லை: கார்த்திக்
என் பின்னால் லட்சோப லட்சம் இளைஞர் சக்தி உள்ளது. நான் தனி ஆள் இல்லை என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
அன்பழகன், வளர்மதி, எஸ்விசேகர் மனு தாக்கல்
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், அமைச்சர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
பாஜக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பாரதீய ஜனதாக் கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
என் உதவியுடன் கூட்டணி ஆட்சி -சு.சுவாமி
வருகிற சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. எனவே ஜனதாக் கட்சியின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமையும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம சுவாமி கொஞ்சம் கூட சிரிக்காமல் கூறியுள்ளார்.
கலர் டிவி: கணக்கெடுப்பு துவக்கம் -கருணாநிதி
கலர் டிவி திட்டம் தொடர்பாக பயன் பெறக் கூடியவர்கள் குறித்த கணக்கெடுப்பை திமுக தொடங்கி விட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுகவினர் பாராமுகம்-சிறுத்தைகள் விரக்தி
தங்களது பிரசாரங்களுக்கு உள்ளூர் அதிமுக தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணிப்பதாக வட மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
ஜெ ஆட்சியில் தமிழகம் மகிழ்ச்சி: வைகோ
1980ல் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மகுடம் சூட்டி சரித்திரம் படைத்ததைப் போல வருகிற தேர்தலிலும் புதிய சரித்திரம் மீண்டும் அரங்கேறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஜெவுக்கு தோல்வி: உளவுத்துறை கணிப்பு- நக்கீரன்
கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளதாக நக்கீரன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க கி.வீரமணி பிரசாரம்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
ஜெ. அலையில் சிக்கிய சீமான்!
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் மத்தியில் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் சீமான் சிக்கிக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரூபா நோட்ட கண்ணில் காட்டியவர் அம்மா-திருமா
தமிழக மக்கள் ஓராயிரம் ரூபாயை ஒரே தாளில் பார்த்தது அம்மாவின் ஆட்சியில்தான். இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல்14, 2006
கருத்துக் கணிப்பு- அதிமுக 46%, திமுக 44%தமிழகத்தில் அதிமுக, திமுக இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் இருப்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் நாளை ஜெ வேட்பு மனு தாக்கல்முதல்வர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அனைத்து அதிமுக வேட்பாளர்களும் நாளையே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
தொங்கு சட்டசபை வரப் போகிறது-விஜயகாந்த்/ஞூணிணணா>கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்று கூறும் திமுக அதை முன்பே செய்யாதது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒயிட் காலர் கார்த்திக்: தொண்டர்கள் சுர்நடிகர் கார்த்திக் ஒரு அரசியல்வாதி போல செயல்படாமல், அலுவலக சிஇஓ போல நடந்து கொள்வதால் பார்வர்ட் பிளாக் தொண்டர்கள், அக்கட்சியின் வேட்பாளர்கள் படு கடுப்பாக உள்ளனர்.
கெட்ட ரத்தம் அகல திமுகவுக்கு வாக்கு-கருணாநிதிதமிழகத்தை சூழ்ந்துள்ள கெட்ட ரத்தம் அகல ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சேப்பாக்கத்தில் கருணாநிதி தேறுவாரா?-வைகோ2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்று கூறி வரும் கருணாநிதியின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முதல் நாளில் 81 வேட்பு மனுக்கள் தாக்கல்:
நெப்போலியன் சொத்து ரூ. 4 கோடிதமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 81 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் களத்தில் குதித்த அரவாணி!வேலூர் சட்டசபைத் தொகுதியில் சல்மா என்ற அரவாணி சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கேப்டன் மீது பசுநேசன் பாய்ச்சல்கட்சி ஆரம்பித்து 6 மாதத்திற்குள் ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்த் அலை பாய்வது நியாயமே இல்லை, அது கண்டனத்துக்குரியது என்று நடிகர் ராமராஜன் கூறியுள்ளார்.
மாஜி அதிமுக அமைச்சர்கள் திமுகவுக்கு ஆதரவுஎம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த, தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ள ராஜாராம், ராஜா முகம்மது, வி.வி.சுவாமிநாதன் ஆகியோர் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி அதிமுக வேட்பாளர் மாற்றம்புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பெரியசாமி மாற்றப்பட்டு கார்த்திகேயன் என்பவர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பிரச்சாரத்துக்கு ரோஜா, மும்தாஜ்!அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடும் அவரது கட்சியின் ஸ்டார் பிரச்சாரினியான நடிகை ரோஜாவும் தமிழகம் வரவுள்ளனர்.












Click it and Unblock the Notifications