என்னையே இலவசமாக தருகிறேன்-கருணாநிதி
கருத்துக் கணிப்பு: திமுகவுக்கே வெற்றி-லயோலா
அதிமுகவே வெல்லும்-ஸ்டார், டைம்ஸ் நெள டிவி
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று லயோலா கல்லூரி நடத்தியுள்ள புதிய கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மரணம்
தனது தம்பியால் சுடப்பட்ட பாஜக மூத்த தலைவரான பிரமோத் மகாஜன் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஜூ.வியை விலைக்கு வாங்கும் சன் டிவி-வைகோ
நேர்மைக்கு இலக்கணமான ஜூனியர் விகடன் பத்திரிக்கையை தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் பெரும் முயற்சிகளுக்குப் பின்னர் விலைக்கு வாங்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள் என எனக்கு தகவல் கிடைத்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பழ. நெடுமாறன் உள்ளிட்ட 500 பேர் கைது
தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஊர்வலம் செல்ல முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து மத பெண்களுக்கும் தங்கம்: ஜெ
இந்துப் பெண்களுக்கு மட்டும் அல்ல இலவச தங்கத் தாலி. கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்கள் உள்பட அனைத்து மதப் பெண்களுக்குமே 4 கிராம் தங்கம் இலவசமாக அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி: 55 சதவீதம் வாக்குப் பதிவு
புதுவை மாநிலத்தில் உள்ள மாஹே, பல்லூர் மற்றும் ஆந்திராவில் உள்ள ஏனாம் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடந்தது.
நாளை முதல் அக்னி நட்சத்திரம்-மண்டை காயும்
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கொடுமையான கோடை வெயில் காலம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தயாநிதியை நீக்காதது ஏன்?- பாஜக கேள்வி
டாடா விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்காமல் பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காப்பது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜாலி டூர்-3 தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்
மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 3 மத்திய தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் பணியைப் பார்க்காமல் இன்பச் சுற்றுலா சென்றனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.
கட்சிகளும் நாய் பிஸ்கெட்டும்-திண்டிவனம் கடுப்பு
நாய்க்கு பிஸ்கட் போட்டு மயக்குவது போல மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை திமுகவும், அதிமுகவும் மாறி மாறி அறிவித்து வருகின்றன என்று திண்டிவனம் ராமமூர்த்தி விமர்சித்துள்ளார்.
டாடாவுடன் சமரசம்: காங் மூலம் திமுக முயற்சி?
டாடா நிறுவனத்துடன் சமரசம் பேச காங்கிரஸ் தலைமையை திமுக தலைமை கேட்டுக் கொண்டதாகவும் ஆனால், அதற்கு காங்கிரஸ் தரப்பு பெரும் தயக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சாப்ட்வேர் பார்க்குகள்-திமுக, காங் உறுதிமொழி
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலூரிலும் திருவண்ணாமலையிலும் சாப்ட்வேர் பார்க்குகளை உருவாக்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டு வந்து ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் திமுகவும் காங்கிரசும் உறுதியளித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக பேச்சாளர் மீது திமுகவினர் தாக்குதல்
திருச்சியில் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதிமுக பேச்சாளரை திமுகவினர் விரட்டி, விரட்டி அடித்தனர். இதையடுத்து திருச்சி 2 தொகுதியின் அதிமுக வேட்பாளர் மரியம் பிச்சை தலைமையில் அக் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வர் பதவிக்கு தயாநிதி போட்டி-சரத்குமார்
திமுக இப்போது தயாநிதி முன்னேற்றக் கழகம் ஆகிவிட்டது. முதல்வர் பதவியைப் பிடிக்க தயாநிதி பல அதிரடிகளை செய்து வருகிறார் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
நன்றியில்லா கேப்டன்: லியாகத்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்து வந்தேன். ஆனால் எனக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் அவர் எனக்கு உதவவில்லை என்று வசனகர்த்தா லியாகத் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒதுங்கினார் எல்.ஜி!-பிரச்சாரத்தை தவிர்க்கிறார்
மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார். அவர் தற்போது எம்.பியாக இருக்கும் திருச்சியில் கூட பிரசாரத்திற்கு வரவில்லை.
பெட்ரோல் விலை உயரும்: ப.சிதம்பரம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை நீண்ட காலம் தள்ளிப் போட முடியாது. கண்டிப்பாக விலையை ஏற்றியே ஆக வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வாக்குச் சாவடியில் செல்போனுக்கு தடை!
வாக்குச் சாவடியைச் சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு செல்போன்களைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாளை பிரதமர் தமிழகத்தில் பிரச்சாரம்:
இன்று முதல் ஜெ. சென்னையில் பிரசாரம்
தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் சென்னை நகர தொகுதிகளில் சுற்றுப்பயணம் ஓட்டு வேட்டையாடுகிறார்.
ரஷ்யா: கடலில் விமானம் விழுந்து 133 பேர் பலி
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த்துக்கு நெருக்கமாக இருந்து வந்தேன். ஆனால் எனக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் அவர் எனக்கு உதவவில்லை என்று வசனகர்த்தா லியாகத் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக வெற்றி பெற்றால்தான் நல்லது: காரத்
மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள திமுக தமிழகத்தில் ஜெயித்தால்தான் தமிழகத்திற்கு நல்லது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
திமுகவினர் பதுக்கிய கிரிக்கெட் பேட்கள் பறிமுதல்
ஓட்டு வேட்டையாடுவதற்காக இளைஞர்களுக்குக் கொடுக்க திமுகவினர் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான கிரிக்கெட் மட்டைகள், பந்துகளை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மே02, 2006
திமுகவில் இணைந்தார் அமைச்சர் இன்பத்தமிழன்!
மறைந்த தாமரைக்கனியின் மூத்த மகனும், தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான இன்பத் தமிழன் இன்று திமுக வில் இணைந்தார்.
பெண்களுக்கு இலசவ தங்கத் தாலி!: ஜெ
ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின்போது 4 கிராம் தங்கத் தாலி இலவசமாக கொடுக்கப்படும் என புதிய வாக்குறுதியை முதல்வர் ஜெயலலிதா திடீரென அறிவித்துள்ளார்.
திருமண நிதியுதவியை நிறுத்தியவர் தாலி
கொடுப்பதேன்?: கருணாநிதி கேள்வி
ஜெயலலிதாவை தோல்வி பயம் பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டது. இதனால் தான் இப்போது தங்கத் தாலி தருவதாக கூறுகிறார் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி மீது வைகோ ரூ1 கோடி நஷ்ட வழக்கு
கலிங்கப்பட்டியில் நான் ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதாக அபாண்டமாக பேசியுள்ள திமுக தலைவர் கருணாநிதி மீது ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
டாடா ஏஜென்சிக்காக வைகோ புளுகு: தயாநிதி
ஒரு ருபாயில் நாடு முழுவதும் பேசும் ஒன் இந்தியா திட்டத்தால் லாபத்தை இழந்துள்ள சிலர் தான் என் மீது பொய்யாக குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள் என மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
போலீஸ் உதவியுடன் சாதிக் கலவரம்-
ஜெயலலிதா சதி: ராமதாஸ் புகார்
தனக்கு தோல்வி உறுதி என்பது உறுதியாகிவிட்டதால் உளவுத் துறை மூலம் தமிழகத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு தேர்தலை ஒத்தி வைக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக பெண் வேட்பாளர் மீது வெறித் தாக்கு
செங்கல்பட்டு தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக பெண் வேட்பாளர் மஞ்சுளா மீது அதிமுவைச் சேர்ந்த கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் மஞ்சுளா படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
காமராஜர், எம்ஜிஆர், ஜெ அண்ட் விஜய்காந்த்!
பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மட்டும் தங்களுக்குச் சம்பந்தம் இல்லாத தொகுதிகளில் போட்டியிடலாம், நான் விருத்தாச்சலத்தில் போடடியிட்டால் தவறா என்று நடிகர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
சைதை பா.பி. வேட்பாளரை கடத்த முயற்சி!
சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் விஸ்வநாதனை, சிலர் காரில் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நான் முதல்வராகும் திட்டமில்லை: ஸ்டாலின்
திமுக தேர்தலில் வென்ற பிறகு நான் முதல்வராக ரகசியத் திட்டம் எதையும் தீட்டவில்லை என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜெயாவின் திருட்டு விசிடி: ப.சி தாக்கு
தமிழகத்தில் கடந்து ஐந்து ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் வெகுவாக குறைந்து விட்டன என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வாக்களிக்க 13 ஆவணங்கள்: நரேஷ் குப்தா!
புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 13 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
அம்மாபட்டியில் நடிகர்-நடிகையர் முற்றுகை
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அவரை ஆதரித்து அதிமுகவைச் சேர்ந்த நடிகர், நடிகையர் பட்டாளம் அந்தத் தொகுதியை முற்றுகையிடத் தொடங்கியுள்ளது.
டாடா - மக்கள் பதிலடி தருவார்கள்: பாஜக
டாடா மிரட்டல் போன்ற திமுகவின் அடாவடிகளுக்கு வருகிற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
பட்டுக்கோட்டையில் போட்டியிடும் கொலை கைதி
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுதலை ஆனவரும், தற்போது கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவருமான தெளபீக் என்பவர் பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
உளைச்சலிலிருந்து மீண்ட பி.சி.ராமசாமி!
மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கல்தா கொடுக்கப்பட்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, அந்த அதிர்ச்சியிலிருந்தும், அதிருப்தியிலிருந்தும் மீண்டு அதிமுக வேட்பாளர் நமச்சிவாயததிற்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
அதிமுகவினர் மிரட்டுகிறார்கள்: லீலாவதி புகார்
ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்யக் கூடாது என்று அதிமுகவினர் தொலைபேசி மூலம் மிரட்டுவதாக ஜெயலலிதாவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ள எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி புகார் கூறியுள்ளார்.
மெரீனாவில் ஓடி ஓடி ஓட்டு வேட்டை!
சென்னை மெரீனா, பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகளில் வாக்கிங், ஜாகிங் சென்றவர்களிடம் திமுக, அதிமுக சார்பில் தொண்டர்கள் ஓடி ஓடி ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் நக்சலைட் போஸ்டர்கள்!
தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒட்டிய போஸ்டர்களால் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தெளிவான தீர்ப்புக்கு மக்கள் தயார்: கி.வீரமணி
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கான பொத்தானை அழுத்துங்கள், உங்கள் வீட்டில் விளக்கு எரியும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
ஏழைகளுக்கு 10 ஏக்கர் நிலம்: புதிய தமிழகம்
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 10 ஏக்கர் நிலம் தருவோம் என்று புதிய தமிழகம் அறிவித்துள்ளது.
மே 01, 2006
சரக்கு ரயில் தடம் புரண்டது: சென்னை-பெங்களூர்
ரயில்கள் ரத்து
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. இதையடுத்து பெங்களூர்-சென்னை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பொய் சொல்வதை ஜெ நிறுத்தனும்- ஈவிகேஎஸ்
மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பொய்யாகன குற்றச்சாட்டுக்களை கூறுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ரூ.5025 கோடிக்கு கணக்கு எங்கே?-பசி கேள்வி
சுனாமி நிவாரணத்துக்காக மத்திய அரசு கொடுத்த ரூ. 5,025 கோடிக்கு கணக்கு எங்கே என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் வாய்ச் சவடால்: ஜெ. கண்டனம்
சுனாமி நிதி தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாய்ச் சவடாலாக பேசி வருகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சங்கரராமன்: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வரும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தயாநிதி இலாகா: பிரதமருக்கு அத்வானி கடிதம்
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் இலாகாவை மாற்ற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
1 ரூபாய் போன் திட்டத்தை நிறுத்த சதி-தயாநிதி
1 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பேசும் எனது திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையிலேயே டாடா விவகாரத்தை கிளப்பி சதித் திட்டம் தீட்டியுள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
புதுவை-3 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது
புதுவை யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட 3 தொகுதிகளில் 3ம் தேதி வாக்குப் பதிவு நடப்பதால் அங்கு இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
த வீக் கருத்துக் கணிப்பு: வைகோ புது விளக்கம்
திமுக எழுதிக் கொடுத்ததையே கருத்துக் கணிப்பாக வெளியிட்டுள்ளது த வீக் ஆங்கில வார இதழ் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ தூண்டிய ஜாதி கலவரம்-கருணாநிதி தாக்கு
கலிங்கப்பட்டி கிராமத்தில் அவர் (வைகோ) ஜாதிக் கலவரத்தைத் தூண்டியதால் சிலர் இறந்தர் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியபோது ஓடோடி வந்து அவரைக் காப்பாற்றியது நான்தான் என்பதை அவர் மறந்து விடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பரோட்டா.. தோசை: காளிமுத்து வசனம்
தமிழக மக்களின் மன நிலை திருப்பிப் போட்ட தோசை போல தெளிவாக இருக்கும். பிய்த்துப் போட்ட பரோட்டா போல இருக்காது என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
திமுக ஆட்சி-2 முதல்வர்கள்: கேரள ஜோதிடர்
வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவே ஆட்சி அமைக்கும். அந்த ஆட்சியில் 2 முதலமைச்சர்கள் இடம் பெறுவர் என்று கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர் குருவாயூர் சூரியன் நம்பூதிரி என்பவர் தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர்-இன்டர்நெட் தருமா திமுக?: சரத்
ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத்தான் கலர் டிவி என்று கூறும் திமுக, கம்ப்யூட்டரும், கூடவே இலவச இன்டர்நெட் இணைப்பும் கொடுத்தால் ஏழை மக்களின் குழந்தைகளின் கல்விக்கு மிகவும் உபயோகமாக இருக்குமே என்று நடிகர் சரத்குமார் கேட்டுள்ளார்.
வைகோவுக்கு ஜெ. போட்ட நிபந்தனை: டிஆர்
தென்றல்னா வீச வேண்டும், ராஜேந்தர்னா பேச வேண்டும். நான் அரசியலுக்கு வந்திருப்பது சம்பாதிக்க அல்ல, சாதிக்க, மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க என்றார் விஜய டி. ராஜேந்தர்.
ஏப்ரல்30, 2006
த வீக் கருத்துக் கணிப்பு: திமுக 45%: அதிமுக 42%
முன்னணி ஆங்கில வார இதழான த வீக் நடத்தியுள்ள தேர்தல் கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மண்ணெண்ணெய் விலையை குறைப்போம்
- கருணாநிதி
திமுக ஆட்சிக்கு வந்தால் ரேசனில் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
எம்ஜிஆர் சமாதியில் லீலாவதி உண்ணாவிரதம்!!
ஆண்டிப்பட்டியில் வேட்பு செய்யச் சென்றபோது வேனில் கடத்திச் சென்று மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி இன்று திடீரென எம்ஜிஆர் சமாதி முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
ஆபரேட்டர்களை மிரட்டும் எஸ்சிவி-வைகோ
அதிமுக தேர்தல் பிரச்சார செய்திகளை சரியாக ஒளிபரப்பக் கூடாது என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களை சுமங்கலி கேபிள் விஷன் மிரட்டி வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
டாடா-தயாநிதி- பாஜக கிளப்பப் போகும் புயல்
திமுகவும், அதிமுகவும் அளித்து வருகிற இலவச அறிவிப்புகளைப் பார்க்கும்போது சிக்கன் பிரியாணி, மீன் குழம்பும் இலவசமாக தரப்படும் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்று பாஜக துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
அதிமுகவில் மேலும் 6 பா.பி. வேட்பாளர்கள்!
அதிமுகவினரின் தீவிர முயற்சி காரணமாக மேலும் 6 பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
கருணாநிதியின் யூஸ் அன்ட் த்ரோ டிவி-செந்தில்
திமுக தலைவர் கருணாநிதி தரப்போவது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீட்டு தூக்கி தூர எறியும் யூஸ் அன்ட் த்ரோ டிவிதான். எனவே மக்கள் இதை நம்பி ஏமாந்து விடக் கூடாது என்று காமெடி செந்தில் கூறியுள்ளார்.
தமிழகத்திலேயே அதிகம் படித்த வேட்பாளர்!
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிக அதிகமாகப் படித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தேமுதிவின் சார்பில் போளூரில் போட்டியிடும் டாக்டர் புர்ஷோத்தமன்.
ஸ்டாலின்-தயாநிதி மாறன் மோதல்: சரத் தகவல்
எனக்கும், எனது மனைவி ராதிகாவுக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. இதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, பயப்படவும் மாட்டோம் என்று சமீபத்தில் திமுகவில் இருந்து அதிமுகவுக்குத் தாவிய நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
வாக்கு கேட்டு 75,000 தபால் கார்டுகள்!
வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ராஜாவை ஆதரித்து தபால் கார்டுகள் மூலம் வாக்கு சேகரித்து வருகிறார் அந்தக் கட்சியைச் சேர்ந்த ஈசான் இளங்கோ என்ற தொண்டர்.
மகள்களுடன் பிரசாரத்தில் கலக்கும் முத்துலட்சுமி!
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தனது இரு மகள்களுடனும் பிரசாரக் களத்தில் கலக்கி வருகிறார்
விதி மீறல்: மதுரை திமுக மேயர் மீது வழக்கு
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில், முன் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சி திமுக மேயர் செ.ராமச்சந்திரன் மீது தேர்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேடை சரிந்தது; கீழே விழுந்தார் பாக்யராஜ்
சென்னை அருகே நடந்த திமுக கூட்டணி பிரசாரக் கூட்டத்தின்போது மேடை சரிந்து விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்தார் இயக்குனர் பாக்யராஜ். ஆனாலும் காயமின்றி தப்பினார்.
பெப்சி விஜயன் மீது கல்வீச்சு
அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் விஜயன் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் திரைப்படத் தொழிலாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல்29, 2006
செல்போன் சிக்கலில் தயாநிதி-பிரதமர் தலையிட
டாடா கோரிக்கை
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வசம் உள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து தொழிலதிபர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புகார் கூறி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக நடத்திய பண பேரம்: போன்
ஆதாரத்துடன் நிரூபித்த கார்த்திக்
பார்வர்ட் பிளாக் வேட்பாளரிடம் அதிமுகவினர் ரூ. 2 லட்சம் பேரம் பேசியதை போன் ஆதாரத்துடன் நிரூபித்தார் அக் கட்சியின் தலைவர் கார்த்திக்.
கருணாநிதிக்கு தடை கோரும் வைகோ
ஜாதி துவேஷத்தைத் தூண்டும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி பேசியிருப்பதால் அவரை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
தயாநிதி மீது சிபிஐயில் சு.சுவாமி புகார்
தமிழக சட்டசபைத் தேர்தலில் எங்களது கூட்டணிக்கு 25 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். எங்களது உதவியுடன்தான் யாரும் ஆட்சி அமைக்க முடியும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
ஜெவின் ஈ அடிச்சான் காப்பி-கருணாநிதி தாக்கு
கிருஷ்ணகிரியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,
திண்டிவனம் கட்சி வேட்பாளர் படுகொலை
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி திண்டிவனம் ராமமூர்த்தியின் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பொன்னுச்சாமி படுகொலை செய்யப்பட்டார்.
சோனியா பிரசார விதிமீறல்-திமுகவுக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது விதிமீறல் நடந்துள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங் கலாட்டா-கிருஷ்ணசாமி மகனுக்கு கல்தா
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான விஷ்ணு பிரசாத் திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சுயேச்சை வேட்பாளருக்கு துடைப்பக்கட்டை அடி
முன் பகையை மனதில் வைத்து, தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடும்பப் பெண்ணை தாறுமாறாக விமர்சித்துப் பிரசாரம் செய்த சுயேச்சை வேட்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சரத் ரசிகர்களை ரவுண்டி கட்டிய அதிமுகவினர்!
தஞ்சாவூரில் அதிமுகவினரும் சரத்குமாரின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நடு ரோட்டில் கட்டி, உருண்டு நாறினர்.
ஜெ. நகைகளின் மதிப்பு: ப.சிதம்பரம் கேள்வி
முதல்வர் ஜெயலலிதா தனது வருமான வரியைக் கூட முறையாக செலுத்தவில்லை என நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி: ஸ்டாலின்
திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது என்று அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக தேர்தலில் 60,000 மின்னணு எந்திரங்கள்
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 60,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
முஸ்லீம்களை காக்க தவறியவர் கருணாநிதி-திருமா
பாஜக கூட்டணியில் இருந்தபோது அந்தக் கட்சியை சந்தோஷப்படுத்த, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்தி வேட்டையாடியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஏப்ரல்28, 2006
தமிழகம்-மேலும் 2 நாள் கடும் வெயில் நீடிக்கும்
தமிழக கடலோரப் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
வைகோ போனது நல்லதாப் போச்சு-அன்பழகன்
திமுக கூட்டணியிலிருந்து ஒருவர் (வைகோ) போய் விட்டதால் இட நெருக்கடி மட்டுமல்லாமல் பல நெருக்கடிகள் குறைந்துள்ளன என்று திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார்.
கோவையில் அத்வானி பிரசாரம்-தீவிர பாதுகாப்பு
பாஜக தலைவர் எல்.கே.அத்வானி வரும் 30ம் தேதி கோவையில் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ 1 கோடி நஷ்டஈடு கேட்டு தினமணிக்கு
தயாநிதி நோட்டீஸ்- உயர் நீதிமன்றத்திலும் வழக்கு
டாடா நிறுவனத்தை நான் மிரட்டியதாக புரளி கிளப்பி வருகிறார்கள், அந்தப் புகார்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
இரண்டு, அரண்டு, உருண்டு, புரண்டு!
வைகோ இப்போது போடுகிறார் வேஷம், அவருக்குக் கிடையாது ரோஷம் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
எஸ்.சி.வி மிரட்டுகிறது: விண் டிவி புகார்
திமுகவுக்கு ஆதரவாக செயல்படாவிட்டால் ஒளிபரப்பை முழுமையாகத் துண்டித்து விடுவோம் என்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனம் தங்களை மிரட்டி வருவதாக விண் டிவி நிர்வாக இயக்குனர் தேவநாதன் கூறியுள்ளார்.
நான் கள்ள ஓட்டு கம்பெனி தலைவன்: எஸ்.எஸ்.
திமுகவில் இருந்தபோது நான்தான் கள்ள ஓட்டு கம்பெனிக்கே தலைவன். எனவே திமுவினர் எப்படி கள்ள ஓட்டுப் போடுவார்கள்என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்-வீரமணி
தமிழகத்தை தமிழன் ஆண்டால் தான் மாநிலம் உருப்படும் என திக தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஜெ வருகை: கிருஷ்ணசாமிக்கு நோ-பர்மிஷன்
பிரதமர் மன்மோகன் சிங் வரும் மே 4ம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்.
விசுவை அதிமுகவுக்கு கூட்டிச் சென்ற மனசாட்சி
அதிமுகவில் சேருமாறு எனது மனசாட்சி சொன்னதால் நான் அக்கட்சியில் சேர்ந்தேன் என்று இயக்குனர் விசு கூறியுள்ளார்.
தேமுதிக பெண் வேட்பாளருக்கு கொலை மிரட்டல்
கபிலர்மலை தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக பெண் வேட்பாளர் செல்விக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தனக்கு பாதுகாப்பு கோரி தேர்தல் அதிகாரியிடம் செல்வி புகார் கொடுத்துள்ளார்.
இலங்கை: இந்தியா தலையிட ராமதாஸ் கோரிக்கை
- மீண்டும் அமைதிப் பேச்சு?
இலங்கையில் மீண்டும் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்திய அரசு தலையிட்டு சிங்கள பேரினவாத அரசின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அமைச்சரை திருப்பி விரட்டிய கிராம மக்கள்
பல்லடத்தில் ஓட்டு கேட்கச் சென்ற அமைச்சர் தாமோதரனை கிராம மக்கள் தடுத்து திருப்பி அனுப்பினர்.
உசிலம்பட்டியில் கார்த்திக் கலக்கல் பிரச்சாரம்
அதிமுகவின் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் உசிலம்பட்டியில் சிங்கம் சின்னம் முடக்கப்பட்டுவிட்டது என கார்த்திக் கூறினார்.
விஜய் ரசிசர்கள் மீது சரத்குமார் புகார்
மதுரையில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
அற்புதங்கள் செய்ய காத்திருக்கிறேன்: ஜெ
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவும் கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
ஹிட்லரை தோற்கடித்த ஜெயலலிதா: அன்புமணி
தமிழகத்துக்கு மத்திய அரசு கொண்டு வரும் எல்லா நல்ல திட்டங்களையும் தடுத்தவர் ஜெயலலிதா என மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்
திருச்சி-தீ விபத்தில் 2 பேர் பலி-9 பேர் காயம்
திருச்சி அருகே வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 2 பேர் உடல் கருகி இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏப்ரல்27, 2006
தயாநிதியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க
ஜெ-வைகோ-பாஜக-சு.சுவாமி-சரத் கோரிக்கை
டாடா நிறுவனத்தை கேவலமாக மிரட்டியன் மூலம் தான் அமைச்சர் பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லை என்பதை தயாநிதி மாறன் நிரூபித்துள்ளார். அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வெற்றி சிகரத்தை நோக்கி திமுக: கருணாநிதி
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலைக்கப்படாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு தண்ணி கிடையாது!
சட்டசபைத் தேர்தலையொட்டி மே 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வீட்டில் ஒருவருக்கு வேலை: ஜெ மீண்டும் உறுதி
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு தரப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகத்தில் கடும் வெப்பம்-காரணம் மாலா!!
என் பேச்சில் சத்தியத்தின் குரல் இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கார்த்திக் வேட்பாளருக்கு துப்பாக்கி போலீஸ்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: மடக்க வரும் கர்நாடக குழு
காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை சமாதானப்படுத்த 16 பேர் கொண்ட குழு தமிழகம் வரவிருப்பதாக மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சிக்கலாகிறது சிங்கம்-சிறுத்தை விவகாரம்
ஜாதிகள் குறித்து தேவையில்லாத கருத்துக்களைக் கூறி தென் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்பட வழி செய்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தினகரனை கைது செய்ய உத்தரவிட்டது சரியே
சசிகலாவின் அண்ணன் மகன் தினகரனை காபிபோஸா சட்டத்தின் கீழ் கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலவச சைக்கிளில் ரூ.100 கோடி ஊழல்-ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் வெறும் கலர் டிவியை மட்டும் தர மாட்டோம், கூடவே கேபிள் இணைப்பும் கொடுப்போம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடவுளே எனக்காக ஓட்டு போடுவார்-விஜயகாந்த்
மக்கள் மூலமாக கடவுளே எனக்காக ஓட்டுப் போட வைப்பார் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
வாய்க்கு வந்தபடி பேசும் கருணாநிதி: திருமா
தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
என் குரல் சத்தியத்தின் குரல்-சொல்லும் வைகோ
என் பேச்சில் சத்தியத்தின் குரல் இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தமிழ்நாடு நாடார் பேரவை திமுகவுக்கு ஆதரவு
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு நாடார் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் கராத்தே!
197 நாட்களுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு துணை மேயர் கராத்தே தியாகராஜன் இன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி சிறையில் தமிழ் தீவிரவாதிகள்
உண்ணாவிரதம்
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இயக்கத் தொண்டர்கள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
160 பேர்: பெண் வேட்பாளர்கள் வரலாறு
இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பெண் வேட்பாளர்கள் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜெ சொத்து முடக்கம்-வழக்கை விசாரிக்க தடை
முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து முடக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏப்ரல்26, 2006
டாடாவை மிரட்டினாரா தயாநிதி?:வைகோ கிளப்பிய புயல்
டாடா நிறுவனததின் டிடிஎச் சேவை திட்டத்தை சன் டிவியிடம் ஒப்படைத்து விடுமாறு இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாநிதி மீது ஜெயா டிவியில் சோ பாய்ச்சல்
தொழிலதிபர் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிநதி மாறன் மிரட்டியதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி ஜெயா டிவியில் தெரிவித்துள்ள கருத்து:
தேர்தலில் ஐஐடி மாணவர்கள்-7 இடத்தில் போட்டி
சென்னை ஐஐடி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள லோக் பரித்ரன் கட்சி தமிழகத்தில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஒங்கும் கேப்டன் கை-ஒடுக்க வரும் தங்கர் டீம்
விருத்தாச்சலம் தொகுதியில் நடிகர் விஜயகாந்த்துக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே போவதால் அதிமுக, பாமக ஆகியவை பீதியடைந்துள்ளன.
காவிரி-புது கமிட்டி அமைக்க கர்நாடகம் எதிர்ப்பு
காவிரி நடுவர் மன்ற ஆணைப்படி இன்னொரு கமிட்டியை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரைச் சந்திக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திமுகவினருக்கு கருணாநிதி எச்சரிக்கை
வீட்டுக்கு ஒளியேற்றும் விளக்கு வேண்டுமா அல்லது காட்டுத் தீ வேண்டுமா என்பதை இந்த சட்டசபைத் தேர்தல் மூலம் தமிழக மக்கள் முடிவு செய்யட்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆளே இல்லாவிட்டாலும் சு.சுவாமி பிரச்சாரம்!
நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
சீமாட்டி ஜெ. சீமானிடம் தோற்பார்: ராமதாஸ்
மே 14 அல்லது 15ம் தேதி கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஓவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
அரட்டை அரங்கத்துக்கு சன் டிவி ஆப்பு!:
எஸ்வி சேகர் தூண்டில்- அதிமுகவில் விசு!
நாடக, சினிமா நடிகர், இயக்குனரான அரட்டை அரங்கம் புகழ் விசு, முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இணைந்த கையோடு எதிர்பார்த்தது மாதிரியே சன் டிவி மீது பல்வேறு புகார்களை அடுக்கினார்.
சிவகங்கை சின்னப் பையன்: வைகோ தாக்கு
ப.சிதம்பரம் இந்தியாவுக்கு நிதி மந்திரியா? இல்லை செட்டி நாட்டுக்கு மட்டும் நிதி மந்திரியா என்று வைகோ கேள்வி எழுப்பினார்.
கடத்தல்- கலாமிடம் லீலாவதி புகார்
ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றபோது கடத்தப்பட்ட எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி அது குறித்து ஜனாதிபதி கலாமுக்கும், மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பியுள்ளார்.
என் வெற்றியே உங்கள் வெற்றி: ஜெயலலிதா
இன்னொரு பொற்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்ல அன்புச் சகோதரியின் அரசுக்கு வாக்களியுங்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஜெவும் ராசியில்லா 8ம்: நல்லகண்ணு கிண்டல்
வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்தில், ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில் இன்று நடிகைகள் பிரசாரம் செய்யும் அளவுக்கு தமிழக அரசியல் தரம் தாழ்ந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் வருத்தத்துடன் கூறினார்.
ஜெயலலிதாவின் நகைகள்: ப.சிதம்பரம் கேள்வி
சுனாமி நிதி முறைகேடுகள் குறித்து பொது மேடையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் விவாதிக்க நான் தயார், அவர் ரெடியா என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சவால் விட்டுள்ளார்.
கார்த்திக்குக்கு தடை: இளையான்குடியில் பதற்றம்-
போலீஸ் குவிப்பு
கார்த்திக்கை பிரச்சாரம் செய்ய விடாமல் போலீசார் தடுத்ததால் இளையான்குடி பகுதியில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும் முக்குலத்தோர் சமூகத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு நன்றி- வெற்றி நமதே: சோனியா
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. தமிழகத்திலும் வரும் காலத்தில் சாதனைகள் புரிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மதுரையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications